Published:Updated:

சென்னை: பாலியல் தொல்லையால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை! - உருக்கமான கடிதம் சிக்கியது

மாணவி தற்கொலை
News
மாணவி தற்கொலை

``எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. அந்தக் கனவு வந்து போவுது. படிக்க முடியலை.” - கடிதத்தில் மாணவி உருக்கம்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், ``இதுக்கு மேல என்னால வாழ முடியாது. ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. அந்தக் கனவு வந்து போகுது. படிக்க முடியலை. இந்தச் சமூகத்துல பாதுகாப்பே இல்லை.

தற்கொலை
தற்கொலை

பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்குக் கற்றுத் தர வேண்டும். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான். அம்மா போயிட்டு வர்றேன். பள்ளி பாதுகாப்பில்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இன்று 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. கடிதம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்று அவரின் குடும்பத்தினரிடமும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றனர்”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz