Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது

திருச்செங்கோடு
திருச்செங்கோடு ( நா.ராஜமுருகன் )

சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி ஆண் நபர்கள் வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

குமாரபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை, அந்தச் சிறுமியின் அக்காள் கணவர் தொடங்கி, தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிவரும் உயரதிகாரி ஒருவர் வரை பாலியல் வதை செய்ததாக எழுந்த புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகிலுள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் 14 வயது மகளை, தொடர்ந்து பாலியல் வதை செய்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் மீது, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியா புகார் கொடுத்தார். அதன்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 11 பேரைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அப்படி, கைதுசெய்யப்பட்ட குமார், வடிவேல், சுந்தரம், பன்னீர், மூர்த்தி, கோபி, அபி, சங்கர், நாய் சேகர், சரவணன் உள்ளிட்ட 11 பேரிடம், போலீஸார் விசாரித்துவருகின்றனர். கைதான 11 பேருக்கும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனையும் நடந்துவருகிறது.

நாமக்கல்: `அதிமுக ஓட்டுக்குப் பணம் தரலை!’ - சாலைமறியல் செய்த மக்களால் போலீஸார் அதிர்ச்சி
திருச்செங்கோடு
திருச்செங்கோடு
நா.ராஜமுருகன்

என்ன நடந்தது என்று விசாரித்தோம்...

``அந்தச் சிறுமிக்கு இரண்டு சகோதரிகள் இருக்காங்க. 6-ம் வகுப்பு படித்த அந்தச் சிறுமி, தனது அக்கா வீட்டில் இருந்தார். இந்தநிலையில், அந்தச் சிறுமியின் அக்கா கணவரான சின்ராஜ் என்பவர், அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்திருக்கிறார். அதை தனது நண்பரான, குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த குமார் என்பவரிடம் சொல்லியிருக்கிறார். இதனால், குமாரும் அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்திருக்கிறார். தொடர்ந்து, குமார் தனது நண்பர்களான சுந்தரம் உள்ளிட்ட இரண்டு பேரிடம் சொல்ல, அவர்களும் சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது சிறுமியின் வீட்டாருக்குத் தெரிந்து பிரச்னையாக, சிறுமியின் பெற்றோருக்கு ரூ.10,000-ஐ கொடுத்து, பிரச்னையை முடித்திருக்கிறார் குமார். தொடர்ந்து, தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் வீட்டு வேலைக்காக, அந்தச் சிறுமியை அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், அந்த உயரதிகாரியும் சிறுமியிடம் அத்துமீறி நடந்திருக்கிறார்.

தொடர்ந்து, அபி, கோபி, சேகர், சரவணன், வடிவேல், பன்னீர், மூர்த்தி என்று 12 பேர் அந்தச் சிறுமியை பாலியல் வதை செய்துள்ளனர். சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி ஆண் நபர்கள் வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அன் அடிப்படையில், அவர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதிக்குப் புகார் கொடுக்க, சிறுமியைப் பாலியல் வதை செய்ததாக 11 பேரை முதற்கட்டமாகக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுமி வீட்டாரின் அனுமதியோடுதான், இந்தக் கொடூரம் நடந்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். விசாரணைக்குப் பின்னர்தான் முழுமையாக என்ன நடந்தது என்பது தெரியவரும்" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு