Published:Updated:

`அருண்ஜெட்லி இறுதிச்சடங்கில் செல்போனைத் திருடிவிட்டனர்!'- காவல் நிலையம் சென்ற பா.ஜ.க எம்.பி

கலிலுல்லா.ச

அருண்ஜெட்லியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.பி சுப்ரியோ உள்ளிட்ட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

arun jeitly funeral
arun jeitly funeral

முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, உடல்நலக் குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 24-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

arun jeitly funeral
arun jeitly funeral

வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர். தொடர்ந்து, ஜெட்லியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு, டெல்லியின் யமுனைக் கரையில் உள்ள நிகம்போத் மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்களின் கார்களும் பின் சென்றன.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில், பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிலையில், இதில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.பி சுப்ரியோ உள்ளிட்ட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. செல்போன்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Babul Supriyo
Babul Supriyo

இதுகுறித்து காஷ்மியர் கேட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செல்போனைப் பறிகொடுத்தவர்களுள் ஒருவரான திஜாரவாலா, செல்போன் திருட்டுப்போனது குறித்தும், செல்போனின் தற்போதைய லொகேஷன் குறித்தும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், உள்துறை அமைச்சகம், அமித் ஷா-வுக்கும் மற்றும் டெல்லி போலீஸை டேக் செய்துள்ளார். 5 புகார்கள் இதுவரை பெறப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.