Published:Updated:

மும்பை: வெளிநாட்டில் வேலை; விமான நிலையத்தில் விட்டுச்செல்லப்பட்ட 11 தமிழர்கள் - மோசடி ஏஜென்ட் கைது

பாதிக்கப்பட்ட தமிழர்கள்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 11 தமிழர்களை ஏமாற்றி விமான நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்ற கேரளா ஏஜென்ட் கைதுசெய்யப்பட்டார்.

மும்பை: வெளிநாட்டில் வேலை; விமான நிலையத்தில் விட்டுச்செல்லப்பட்ட 11 தமிழர்கள் - மோசடி ஏஜென்ட் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 11 தமிழர்களை ஏமாற்றி விமான நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்ற கேரளா ஏஜென்ட் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
பாதிக்கப்பட்ட தமிழர்கள்

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 11 தமிழர்கள் கேரளாவைச் சேர்ந்த ஏஜென்ட் முஹம்மது சம்சுதீன் என்றபவரிடம் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லத் தொடர்புகொண்டனர். அவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, அவர்களைத் தமிழகத்திலிருந்து மும்பைக்கு வரவழைத்தார். மும்பை குர்லா ரயில் நிலையத்துக்கு வந்த 11 பேரையும், ஏஜென்ட் குர்லா டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மும்பை செம்பூரிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கவைத்தார். பின்னர் அவர்களிடம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி தலா 50 ஆயிரம் ரூபாய், பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கிச் சென்றார்.

மும்பை: வெளிநாட்டில் வேலை; விமான நிலையத்தில் விட்டுச்செல்லப்பட்ட 11 தமிழர்கள் - மோசடி ஏஜென்ட் கைது

அடுத்த நாள் விசா அடித்த பாஸ்போர்ட், விமான டிக்கெட் கொடுத்து மும்பை இன்டர்நேஷனல் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் அந்த ஏஜென்ட். அதன் பின்னர், 11 பேரையும் விமான நிலையத்தின் உள்ளே விட்டுவிட்டு ஏஜென்ட், மொபைலை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். உள்ளே சென்ற 11 பேரும் போர்டிங் பாஸ் எடுக்க நின்றபோது அதிகாரிகள், 11 பேர்களிடமும் இருந்த டிக்கெட், விசா போலி என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே விமான நிலைய அதிகாரிகள் 11 தமிழர்களை எச்சரித்து வெளியே அனுப்பிவிட்டனர். ஏமாந்துபோன 11 தமிழர்களும் ஒன்றும் புரியாமல் திரும்ப மும்பை செம்பூரில் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தனர்.

அவர்கள் அங்கு தங்களை அழைத்து வந்த ஏஜென்ட்டை தேடினார்கள். எங்கு செல்வது என்று ஒன்றும் புரியாமல் திணறிய 11 தமிழர்களுக்கு செம்பூர் சித்ரா ஹோட்டல் உரிமையாளர் மோகன் என்பவர் உதவி செய்தார். மோகன் சயான் கோலிவாடாவைச் சேர்ந்த சுதாகர் என்பவரைத் தொடர்புகொண்டார். சுதாகர் உடனே வந்து 11 பேரையும் அழைத்துக்கொண்டு செம்பூர் பகுதி துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் ராஜபுத்தைச் சந்தித்து நடந்த அனைத்தும் தெரிவித்தார். உடனே அவர் செம்பூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்து இது குறித்து விசாரிக்கும்படிகேட்டுக்கொண்டார். செம்பூர் இன்ஸ்பெக்டர் சுனில் ஜாதவ் மற்றும் அதிகாரிகள் உடனே விரைந்து செயல்பட்டு குற்றவாளி சம்சுதீனை 24 மணி நேரத்தில் கைதுசெய்தனர்.

அவரிடமிருந்து மேலும் 50 தமிழர்களின் பாஸ்போர்ட்,  போலி விசாவை பறிமுதல் செய்தனர். அவரைக் கைதுசெய்த போலீஸார் அவர்மீது வழக்கு பதிவுசெய்து அவரை குர்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஏழு நாள் போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.