Published:Updated:

புதுக்கோட்டை: 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - கணித ஆசிரியர் போக்சோவில் கைது

பாலியல் தொல்லை
News
பாலியல் தொல்லை ( representational image )

11வயது சிறுமி, கணித ஆசிரியர் சீனியப்பா ஆகியோரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், கணித ஆசிரியர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 11 வயது சிறுமி. கறம்பக்குடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில், அந்த மாணவிக்கு, அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரியும் சீனியப்பா என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குச் சரியாக வரவில்லை. ஒருவித சோகத்துடன் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர், விசாரித்தபோதுதான், சிறுமிக்குக் கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

புதுக்கோட்டை: 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - கணித ஆசிரியர் போக்சோவில் கைது

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சீனியப்பாமீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சிறுமியிடமும், கணித ஆசிரியர் சீனியப்பாவிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், கணித ஆசிரியர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz