Published:Updated:

செங்கல்பட்டு: ஆபாச இணையதளங்களுக்கு அடிமை! - சிறுமி கொடூரக் கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்

கொலை
கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக 17 வயது சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தை அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் முட்புதருக்குள் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்திலுள்ள செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஐடிஐ படிக்கும் மாணவன் ஒருவரின் செல்போன் நம்பரின் சிக்னல் அங்கு காட்டியது.

செல்போன்
செல்போன்

இதையடுத்து ஐடிஐ படித்துவரும் 17 வயதாகும் மாணவனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவன், தனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தான். இருப்பினும் போலீஸாரின் சந்தேகப் பார்வை சிறுவன் மீது விழுந்தது. அதனால் அவனின் செல்போன் நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தத் தொடங்கினர். அந்த 17 வயது சிறுவனுக்கு அப்பா, அம்மா இல்லை. அதனால் உறவினர் வீட்டில் வளர்ந்துவந்தான். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் உறவினர்கள் அவன் ஆசைப்பட்டு கேட்டதால் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அந்த போன் மூலம் ஆபாச இணையதளங்களில் உள்ள வீடியோக்களை சிறுவன் பார்த்துவந்திருக்கிறான். ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகியிருக்கிறான்.

ஆந்திரா: பெண் இன்ஜினீயர் கொலை; கொரோனா மரணம் என நாடகம்! - தீ வைத்து எரித்த கணவர் சிக்கியது எப்படி?

இந்தத் தகவல் கிடைத்ததும், மீண்டும் சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுவனின் ஸ்மார்ட்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் சில ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவனின் செல்போன் நம்பரைவைத்து ஆய்வு செய்தபோது ஆபாச இணையதளங்களிலிருக்கும் வீடியோக்களை மணிக்கணக்கில் அவன் பார்த்ததும் தெரியவந்தது. மேலும் கஞ்சா போதைக்கும் அந்தச் சிறுவன் அடிமையாகியிருந்தான். சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிறுவன் மீதான சந்தேகம் போலீஸாருக்கு மேலும் வலுத்தது. இதையடுத்து இந்த தடவை சிறுவனிடம் போலீஸார் கிடுக்குப்பிடிக் கேள்விகளைக் கேட்டனர். போலீஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்த சிறுவன், பதிலளிக்க முடியாமல் திணறினான். அதன் பிறகுதான் சிறுமியைக் கொலை செய்தததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து சிறுவனை போலீஸார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ
representational image

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் கூறுகையில், ``சிறுமிக்கு 11 வயதாகிறது. அவள், 6-ம் வகுப்பு படித்துவந்தாள். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தாள். இந்தநிலையில், கடந்த 29-ம் தேதி மின்கட்டணம் செலுத்துவதற்காகச் சிறுமி சென்றிருக்கிறாள். அதன் பிறகு அவள் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதன்பேரில் விசாரணை நடத்திவந்த நேரத்தில்தான் காட்டுப்பகுதியில் சிறுமி ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது அது காணாமல்போன சிறுமி என அவளின் பெற்றோர் உறுதிப்படுத்தினர். சிறுமியைக் கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. ஆபாச வீடியோ பார்ப்பதிலும், கஞ்சா போதைக்கும் அடிமையான சிறுவன், சம்பவத்தன்று தனியாக வந்த சிறுமியிடம் பேசியிருக்கிறான். அப்போது தெரிந்த அண்ணன் என்பதால் சிறுமியும் பேசியிருக்கிறாள். அப்போதுதான் சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சிறுவன், பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். சிறுமி சத்தம் போட்டதால் அவளைக் கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கிறான்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் அவளின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். அதனால் சிறுவன்மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

இதற்கிடையில் சிறுமியைக் கொலை செய்த சிறுவன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒஎஉ சிறுமியை, சிறுவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு