புதுச்சேரி: சங்கர ராமன் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த 2 மனுக்களையும் சங்கரராமன் மனைவி பத்மா வாபஸ் பெற்றுள்ளார்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கர ராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கரராமன் மனைவி பத்மா 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஒரு மனுவில், வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் எனவும், 2 வது மனுவில் வழக்கில் அப்ரூவராக மாறியிருந்த ரவி சுப்ரமணியன் பிறழ் சாட்சி அளித்துள்ளதால், அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
##~~## |
இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பத்மா,இன்று தனது 2 மனுக்களையும் வாபஸ் பெற்றுள்ளார்.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை,வருகிற நவம்பர் 5 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.