Published:Updated:

பரமக்குடி: 3 பேர் கொலை சம்பவத்தால் பதட்டம்!

விகடன் விமர்சனக்குழு
பரமக்குடி: 3 பேர் கொலை சம்பவத்தால் பதட்டம்!
பரமக்குடி: 3 பேர் கொலை சம்பவத்தால் பதட்டம்!

பரமக்குடி:பரமக்குடியில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது.கடைகள் அடைக்கப்பட்டுள்ளன;பேருந்துகளும் ஓடவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் நேற்று தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரம், பாம்பு விழுந்தான் ஆகிய ஊர்களில் பிரச்னை ஏற்பட்டதால் தேவர் ஜெயந்தி விழாவுக்கு செல்பவர்கள் முதுகுளத்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது.

பரமக்குடி: 3 பேர் கொலை சம்பவத்தால் பதட்டம்!

விழாவுக்கு செல்பவர்கள் பரமக்குடி, பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த நிலையில் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் பொன்னையாபுரம், பாம்பு விழுந்தான் ஆகிய ஊர்களின் வழியாக கோஷம் போட்டபடி சென்றனர்.

##~~##
இதனால் அந்த கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து காரில் சென்ற சிவக்குமார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மலைக்கண்ணன்,வீரமணி ஆகிய 3 பேரையும் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் 3 பேரும் உயிரிழந்தனர்.
கொலை செய்யப்பட்ட சிவகுமாருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வேலங்குடி ஆகும். மலைக்கண்ணன், வீரமணி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் காரணமாக பரமக்குடியில் பதட்டம் ஏற்பட்டது. இ கடைகள் அடைக்கப்பட்டன;பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சு சம்பவம், மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினார்கள்.
கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன.
தாசில்தார் கார் டிரைவர் வெள்ளைச்சாமி மண்டை உடைக்கப்பட்டது.அவர் பரமக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன.மாவட்டம் முழுவதும் பேருந்துகளும் ஓடவில்லை.இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமநாதபுரம் நகரில் மருத்துவமனை சாலை,பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,பரமக்குடி,ராமேஸ்வரம்,தொண்டி,திருவாடானை,கமுதி,முதுகுளத்தூர், சாயல்குடி போன்ற பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
84 பேர் மீது வழக்குப்பதிவு
இதனிடையே பரமக்குடி கொலைச் சம்பவம் தொடர்பாக பரமக்குடியில் 84 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.