வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (19/01/2018)

கடைசி தொடர்பு:13:55 (19/01/2018)

மணற்பரப்பில் ஒரு விசாரணைக் கோட்டை..! - வேட்டையாடு, விளையாடு! பகுதி-12

காவல்துறை

கொக்குவேட்டை, துப்பாக்கி மூட்டை... கதை சொன்ன கொள்ளையன்..! - வேட்டையாடு, விளையாடு - பகுதி -11 

ன்ஸ்பெக்டரின் இடுப்பிலிருந்து நழுவிய துப்பாக்கியைப் பார்த்ததும், தோட்டா கிருஷ்ணமூர்த்தி கண்கள் வெளிறிப் போய்விட்டது. முண்டேல்பாஜூ அவனைவிட  அதிகமாகப் பயந்து கிடந்தான். நினைத்தபடி உடலை அசைக்க முடியாமல்  இருவரின் கைகளும் இறுக்கிக் கட்டப் பட்டதே, அவர்களின் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. ஜீப்பிலிருந்து இறங்கியவர்கள், இறங்கிய இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தனர். சென்னை மெரீனா போல, முழங்கால் புதையும் மண்வளத்துடன் அந்தப் பகுதி இருந்தது. மணற்பரப்பு எங்குபோய் முடிகிறது என்றே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு தூரம் மணல் பரவிக் கிடந்தது. மணற்ப்பகுதி தொடங்கும் இடத்துக்கு முன்னே இருக்கும் வெளிவட்டச் சாலையில்தான் ஜீப்பை நிறுத்தியிருந்தோம்.

போலீஸ் வாகனங்கள் நிறுத்தும் சர்வீஸ்சாலை போல அந்த இடம் இருக்கிறது. அங்கிருந்து, வந்த வழியே வெளியே போக இருநூறு மீட்டருக்கு ஒரு ‘கேட்’ இருக்கிறது. அந்த ‘கேட்’ வாசலிலும், ‘கேட்’ டைத் தாண்டிச் செல்லும்  இன்னொரு வெளிப்பாதையிலும் கன்- பாய்ன்ட்டுடன் 'சென்ட்ரி' (பாதுகாப்புப் போலீசார்) நிற்கிறார்கள். அனுமதி இல்லாமல் யாரும் எளிதில் நுழைய முடியாது. ஏறக்குறைய ஶ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளம் போல் 'என்ட்ரி' ஏரியாவே மிரட்டலாக இருக்கிறது. அத்தனை பாய்ன்ட்டையும் கடந்து இந்த மணல் பாய்ன்ட்டில் வந்து இப்போது நிற்கிறோம்.

ஏ.ஜி.மௌர்யா (ஓய்வு ஐ.ஜி.)மணல் பாய்ன்ட்டைத் தொடாமல்  ஜீப்பிலேயே விசாரணை அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்றால், நீண்ட தூரம் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டும். தவிர, ரகசிய விசாரணைக்கு மட்டுமே இந்த இடம் பயன்படுத்தப் பட்டு வந்ததால், மணற்பரப்பிலேயே அக்யூஸ்ட்டுகளை நடந்துவரச் சொல்லி விட்டு,  ஜீப்பை எடுத்துக் கொண்டு, விசாரணை அதிகாரிகள் போய் விடுகிறார்கள். அக்யூஸ்ட்டுகள் எங்கும் தப்பித்து ஓடிவிட முடியாது. செல்போன் டவர்கள் போல  15 அடியில் ஆரம்பித்து 50 அடி உயரம் வரை சுற்றிலும் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கியுடன் போலீசார் நிற்கிறார்கள்.

அதே இடத்தில் அசையாமல் நிற்கும் முண்டேல் பாஜூவையும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியையும் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தோணவில்லை. 'நேராக நடங்க, அதோ அந்த பில்டிங் பக்கத்தில் தான் நாம் போக வேண்டும், நடங்க சீக்கிரம்' என்று அவர்களின் முதுகில் கைவைத்து எஸ்.ஐ.கள் ராஜ்குமார் சாரும், பால்ராஜ் சாரும்  இரண்டாவது முறையாக அழுத்திப் பார்த்தனர். ஆனால் இரண்டு பேருமே அசைவதாகத் தெரியவில்லை. அது அவர்களின் உச்சக்கட்ட பயத்தின் பிரதிபலிப்புதானே தவிர, எதிர்ப்பைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது.

சென்னை ஸ்பெஷல் டீம்  தலைமைக் காவலர்கள் கோபாலும், கன்னையனும் அக்யூஸ்ட்டுகளை அலற விடுவதில் செம 'கில்லி'கள் என்பதை இந்த கிளைமாக்ஸிலும்  நிரூபித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அக்யூஸ்ட்டைக் கண்டு கொள்ளாமலே எங்களைப் பார்த்து,  ‘ஆந்திராவில் இருக்கும் இந்த என்கொயரி பாய்ன்ட்டை நாங்கள் பயன்படுத்துவதே அதற்காகத்தான்... என்ன புரிகிறதா?’ என்று பேச்சுக்கு நடுவே சின்னதாக ஒரு இடைவெளியைக் கொடுத்தனர். பின்னர் மீண்டும் அதே இடத்திலிருந்து ஆரம்பித்தனர்.

தனிப்படை எஸ்.ஐ. ராஜ்குமார் (இப்போது இன்ஸ்பெக்டர்)‘இங்கு வந்து விட்டால், அதன்பிறகு அவன் வாழ்வது மிகவும் கஷ்டம். சிலர் உள்ளே போவதற்கு முன்பாகவே அனைத்தையும் சொல்லி விடுவார்கள்... போன மாதம் கூட ஆந்திரா கமிஷனர், பர்சனலாக ஒரு கேசுக்கு எங்கள் டீமைத்தான்  இங்கே, கேட்டு வாங்கியிருந்தார். இந்த இடத்தில் கொண்டு வந்துதான் விசாரித்தோம், பாவம்... வாழவேண்டிய பையன்' என்று உதட்டைப் பிதுக்கினார்கள். 'ஏட்டய்யா, எங்களால முடியலை' என்று சொல்லாமல் இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.களும் சிரிக்காமல் அமைதி காத்தது பெரிய விஷயம்.

ஏட்டய்யாக்கள் எதிர்பார்த்த ரிசல்ட் சில நிமிடங்களில் வராமல் போனால், அடுத்த அதிரடிக்கு எஸ்.ஐ. ராஜ்குமார் தயாராக இருந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் மொத்த விவகாரமும் முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை, இன்ஸ்பெக்டர் நவீன் சாரின் கண்களில் தெரிந்தது. நேரம் கொஞ்சங் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் நவீன் சார், பேஜரைப் பார்ப்பது, அதிலிருந்து குறிப்பு எடுத்துக் கொள்வது என்பதில் மும்முரமாக இருந்தார்.

பின்னர், எங்களை மட்டும் அருகில் வரும்படி சைகை காட்டி விட்டு பின்பக்கமாக திரும்பி நடக்க ஆரம்பித்தார்.'அய்யா, சொல்லுங்கய்யா, நாங்க என்ன செய்யணும்' என்று டீமில் இருந்த ஆந்திர போலீசாரும் துடிப்புடன் கேட்டனர். இப்போது அக்யூஸ்ட்டுகளுக்கும் எங்களுக்கும் ஐம்பது மீட்டர் இடைவெளி இருந்தது. அக்யூஸ்ட்டுகளோ பயம் காரணமாக  எங்களுக்கு முகத்தைக் காட்டியபடி திரும்பி நின்று கொண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்னதைக் கேட்டதும், எங்கள் கோபம் உச்சத்துக்குப் போய்விட்டது. ஒட்டுமொத்தமாக நாங்கள் அக்யூஸ்ட்டுகளை  நோக்கி நகர்ந்தோம்....

தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


டிரெண்டிங் @ விகடன்