Published:Updated:

பால்தாக்கரே: ஃபேஸ்புக் பெண்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்!

பால்தாக்கரே: ஃபேஸ்புக் பெண்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்!
பால்தாக்கரே: ஃபேஸ்புக் பெண்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்!
பால்தாக்கரே: ஃபேஸ்புக் பெண்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்!

மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2  பெண்களுக்கு தண்டனை விதித்த நீதிபதியை மும்பை உயர் நீதிமன்றம் இடமாற்றம்  செய்து உத்தரவிட்டுள்ளது.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில்  முழு அடைப்பு நடத்தப்பட்டது.இதை விமர்சித்து மகராஷ்ட்ரா மாநிலம் பல்கர் நகரை  சேர்ந்த ஒரு பெண், ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.அதற்கு அவரது தோழி  'லைக்'போட்டிருந்தார்.

இந்நிலையில் சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும்  கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்தனர்.அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல்  மாஜிஸ்திரேட்ட ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 

##~~##
இதற்கிடையே இந்த கைது நடவடிக்கை நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய  கட்ஜூ,மகாராஷ்ட்ரா முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மாஜிஸ்திரேட் ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில்  இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை  மும்பை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.