Published:Updated:

கடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான்! - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா

இரா.மோகன்
உ.பாண்டி
கடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான்! - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா
கடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான்! - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா

தமிழகத்திலிருந்து  இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட 113 கிலோ  கஞ்சா, இலங்கைக்  கடற்படையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குக் கடற்பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்தவிருந்த 113 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட பெட்டி ஒன்றைக் கைப்பற்றினர். அந்தப் பெட்டியை சோதனையிட்டபோது,  கடல் நீர் உள்ளே செல்லாதவாறு மிகவும் நுணுக்கமான முறையில் தயார்செய்யப்பட்டு, அதனுள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சாவின் மதிப்பு, ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபாய்  என கணக்கிடப்பட்டுள்ளது.


 

இலங்கை இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பு வழியாக, சமீபகாலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்துவந்த நிலையில், தற்போது இலங்கை போலீஸாரின் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடத்தல்காரர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதி வழியாக கஞ்சா கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.  இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா, காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின், இந்தக் கஞ்சாவை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.