Published:Updated:

கொள்ளையன் நாதுராமை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கக் கோரி மனு!

கொள்ளையன் நாதுராமை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கக் கோரி மனு!
கொள்ளையன் நாதுராமை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கக் கோரி மனு!

கொள்ளையன் நாதுராமை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கக் கோரி மனு!

கொளத்தூர் நகைக்கடை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 


சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை அடித்த வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சௌத்ரி, பக்தாராம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமைப் பிடிப்பதற்காகச் சென்னை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு, அவருடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு என்பதால், விசாரணையை ராஜஸ்தான் போலீஸார் தீவிரப்படுத்தினர். 
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரான் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில், ராஜஸ்தான் விரைந்த தமிழக போலீஸார், டிரான்ஸிட் வாரன்ட் மூலமாக நாதுராம் உள்ளிட்டோரை விமானத்தில் சென்னை கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நாதுராம், தினேஷ் சௌத்ரி மற்றும் பக்தாராம் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கொளத்தூர் ராஜமங்கலம் போலீஸார் எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுமீது நாளை விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு