Published:Updated:

பழிக்குப் பழியாக தொடர் கொலைகள்; ரவுடிகளுடன் சிக்கிய புதுச்சேரி பெண் தாதா!

பழிக்குப் பழியாக தொடர் கொலைகள்; ரவுடிகளுடன் சிக்கிய புதுச்சேரி பெண் தாதா!
பழிக்குப் பழியாக தொடர் கொலைகள்; ரவுடிகளுடன் சிக்கிய புதுச்சேரி பெண் தாதா!

பழிக்குப் பழியாக தொடர் கொலைகள்; ரவுடிகளுடன் சிக்கிய புதுச்சேரி பெண் தாதா!

புதுச்சேரி முன்னாள் அமைச்சரைக் கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் தாதா எழிலரசி, 14 ரவுடிகளுடன் அடுத்தக் கொலைக்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைக்கால் சாராய வியாபாரியான ராமுவுக்கு வினோதா, எழிலரசி என இரண்டு மனைவிகள். ஒரு கட்டத்தில் வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்த ராமு எழிலரசியுடன் மட்டுமே வசித்து வந்தார். அதையடுத்து ராமு, எழிலரசி இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை அனுப்பினார் வினோதா. அதில் ராமு கொலை செய்யப்பட எழிலரசி பலத்த காயங்களுடன் தப்பினார். தன் கணவரின் கொலைக்குக் காரணமான அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்தார் எழிலரசி. அதன்படியே ராமுவின் முதல் மனைவி வினோதாவை கூலிப்படை ஏவி கொலை செய்தார் எழிலரசி.

இதற்கிடையில்தான் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான வி.எம்.சி சிவக்குமார் கடந்த 2017 ஜனவரி மாதம் 3-ம் தேதி கரைக்கால் மாவட்டம் நிரவியில் கூலிப்படைக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டும், நாட்டு வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், தனது கணவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக எழிலரசிதான் கூலிப்படை வைத்து முன்னாள் அமைச்சரை கொலை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து எழிலரசியை தேடும் பணியில் போலீஸ் குதித்ததை அடுத்து 2017 ஜனவரி 23-ம் தேதி அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதையடுத்து புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டாஸ் போடப்பட்டது. இதற்கிடையில் சிறைக்குள்ளேயே பிரபல தாதா மர்டர் மணிகண்டனுடன் தனியறையில் சந்தித்து சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்து தலைமறைவான எழிலரசி, பல்வேறு மறைவேடங்களில் மாறி மாறி தங்கி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில்தான் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் விழா என்று கூறி ஹால் புக் செய்துவிட்டு ரவுடிகளுடன் எழிலரசி சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸுக்குத் தகவல் சென்றது. அதையடுத்து எஸ்.எஸ்.பி ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் அதிரடியாக அங்கு சென்ற போலீஸார் சதித்திட்த்தில் ஈடுபட்டிருந்த எழிலரசி, மர்டர் மணிகண்டனின் ஆதரவு ரவுடிகள் உள்ளிட்ட 14 ரவுடிகளை அதிரடியாகக் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த ரவுடி விக்ரமன் என்பவனும் இந்தக் கும்பலோடு கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு