வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (14/02/2018)

கடைசி தொடர்பு:13:53 (14/02/2018)

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு!

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் வரும் திங்கள் கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தஷ்வந்த்

கடந்த வருடம் பிப்ரவரியில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைச் செய்த அதே குடியிருப்பில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது. 

இதுகுறித்த வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விடுமுறை நாட்களிலும்கூட தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. தற்போது சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்டனர். இதற்கிடையே தீர்ப்பிற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தஷ்வந்துக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிறுமியின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க