Published:Updated:

மாணவி பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் அமளி!

மாணவி பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் அமளி!
மாணவி பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் அமளி!
மாணவி பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் அமளி!

புதுடெல்லி:  டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று தொடங்கிய போது,கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு,  டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

##~~##
ஆனால் அதனை ஏற்க மறுத்த அவைத் தலைவர் அன்சாரி, கேள்வி நேரத்தை நடத்த  தொடங்கினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம்  நிலவியது. எனவே அவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து  மீண்டும் தொடங்கிய அவையில் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கட்சி சார உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி, டெல்லியில்  தொடரும் பாலியல் சம்பவங்களுக்கு மாநகர காவல்துறை ஆணையரே காரணம் என்றும்,  அவரே ஒரு கிரிமினல் என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவையில்  கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயா பச்சன் பேசுகையில்,கிரிமினல்களின் கூடாரமாக டெல்லி ஆகிவிட்டதாக  குற்றம்சாட்டினார்.