Published:Updated:

டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!

டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!

புதுடெல்லி: 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான டெல்லி  மாணவியின் சில முக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும்  அம்மாணவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு நேரில் சென்று  பார்த்து, அம்மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள்  பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி  வருகிறார்.

##~~##
குறிப்பாக அம்மாணவியின் சில அதிமுக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக  சேதமடைந்துவிட்டதாக, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது  மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும்  கூறியுள்ளனர்.  
ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் இத்தகைய நிலையில் இருந்தால் அவரது  நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு  செயற்கை  சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.