Published:Updated:

நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலை!
நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலை!

நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லையில் ரியல் எஸ்டேட் மோதல் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார். கடந்த 1996-ல் கொடியன்குளம் கிராமத்தில் நடந்த சாதிய மோதல்கள், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சாதியப் படுகொலைகள் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்டவர். அத்துடன், புதிய தமிழகம் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்துடன், அக்கட்சியின் நிறுவனரான டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்தார். 

ஆனால், சில வருடங்களுக்கு முன்னர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய தமிழகம் கட்சியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க-வில் இணைந்தார். அத்துடன், டாக்டர்.கிருஷ்ணசாமி பொய்யான சாதிச் சான்று கொடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. தற்போது குமார், நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இன்று தனக்குச் சொந்தமான பாளையங்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் மருமகன் செந்தில்குமாருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. அதனால் இருவரும் உயிர் தப்ப வீட்டுக்குள் ஓடியிருக்கிறார்கள். ஆனால், செந்திகுமாரை பிடித்துவிட்டு அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. அதனைத் தடுக்க முயற்சித்த குமாரின் மனைவி விஜயலட்சுமி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

இந்தச் சம்பவத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். குமாரைக் கொல்ல வந்த கும்பல் அங்கிருந்த அவரது மருமகன் செந்திகுமாரை கொலை செய்து விட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த குமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் மோதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளதா? அல்லது அரசியல் பின்னணியில் இந்தச் சம்பவம் நடந்ததா? என்பது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் கொலைச் சம்பவம் காரணமாக நெல்லை பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு