Election bannerElection banner
Published:Updated:

`புருஷனைக் காப்பாத்துங்க' - பதறி ஓடிவந்த மனைவிகள்... களமிறங்கிய சென்னை போலீஸ்

`புருஷனைக் காப்பாத்துங்க' - பதறி ஓடிவந்த மனைவிகள்... களமிறங்கிய சென்னை போலீஸ்
`புருஷனைக் காப்பாத்துங்க' - பதறி ஓடிவந்த மனைவிகள்... களமிறங்கிய சென்னை போலீஸ்

`புருஷனைக் காப்பாத்துங்க' - பதறி ஓடிவந்த மனைவிகள்... களமிறங்கிய சென்னை போலீஸ்

காரில் கடத்தப்பட்ட கணவர்களை அவர்களுடைய மனைவிகள் போலீஸ் நிலையத்தில் உடனடியாகப் புகார் கொடுத்துக் காப்பாற்றியுள்ளனர். 

சென்னை கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் பதறியடித்துக்கொண்டு வந்தனர். அங்கு இருந்த போலீஸாரிடம் எங்களின் கணவர்களை காரில், கந்துவட்டிக்கும்பல் கடத்திவிட்டதாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர். இதனால் போலீஸார் உடனடியாக வாக்கி டாக்கியில் கடத்தல் விவரத்தைத் தெரிவித்ததோடு அந்தக் காரை மடக்கும்படி கூறினர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அம்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு காரில் வந்த ஒருவர், காரில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இருவரையும் போலீஸில் ஒப்படைத்தார்.  இவர்கள் இருவரும் தன்னிடம் ஏலச்சீட்டு எடுத்துவிட்டு பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றிவருவதாகப் புகார் தெரிவித்தார். இந்தத் தகவல் அம்பத்தூர் போலீஸ் நிலையத்திலிருந்து உடனடியாக கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்குத்  தெரிவிக்கப்பட்டதால் சக போலீஸார் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பஞ்சாட்சலம், மளிகைக்கடை நடத்திவருகிறார். இவரின் தம்பி பாஸ்கர். இவர்கள் இருவரும் அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடுவைச் சேர்ந்த கணேசனிடம் தலா 5 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டு அதை எடுத்துள்ளனர். ஆனால், பணத்தை மாதந்தோறும் செலுத்தவில்லை. இந்தச் சமயத்தில் இருவரும் வீட்டை விற்று பணம் வைத்திருக்கும் தகவல் கணேசனுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் பணத்தைக் கேட்க இருவரையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பஞ்சாட்சலத்தின் மனைவி சசிகலாவும் பாஸ்கரின் மனைவி மீகாவும், தங்கள் கணவர்களைக் கந்துவட்டிக்கும்பல் கடத்திச் செல்வதாகக் கருதி கொரட்டூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்தத் தகவல் கணேசனுக்குத் தெரிந்ததும் அவர், இருவரையும் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, பணம் கொடுக்காமல் ஏமாற்றுவது தொடர்பாகப் புகாரும் கொடுத்துள்ளார். இந்த இரண்டு புகார்களின் பேரில் கொரட்டூர், அம்பத்தூர் போலீஸில் தனித்தனியாக வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு