Published:Updated:

டெல்லி மாணவி உயிருக்கு போராடுகிறார்!

டெல்லி மாணவி உயிருக்கு போராடுகிறார்!
டெல்லி மாணவி உயிருக்கு போராடுகிறார்!
டெல்லி மாணவி உயிருக்கு போராடுகிறார்!

புதுடெல்லி: சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட டெல்லி மாணவியின்  மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவியின் உடல்  உள்ளுறுப்புகள் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து,மேல் சிகிச்சைக்காக  சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு,அங்கு உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லியில் இருந்து  சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். 6 மணி நேர விமானப் பயணம் என்பதால்  விமானத்தில் அவசர சிகிச்சை பிரிவு போல உயிர்காக்கும் கருவிகளுடன் இணைத்து  மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
 

##~~##
அந்த விமானத்தில் மருத்துவக் குழுவினரும் உடன் சென்றனர்.30 ஆயிரம் அடி  உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது நடுவானில் திடீர் என்று மாணவியின்  உடல்நிலை மோசம் அடைந்தது.அவரது ரத்த அழுத்தம் வேகமாக உயர்ந்தது.உடனே  மருத்துவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து சிகிச்சை அளித்தனர்.இதில் மாணவியின் ரத்த  அழுத்தம் சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் மாணவி அபாய கட்டத்தில்  இருந்தார்.
 
இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவரது ரத்த அழுத்தம் தற்போது கட்டுக்குள் இருக்கிறது என்றாலும்  உடல் நிலை தொடர்ந்து சீரற்ற நிலையில் உள்ளதாகவும், மூளையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு  ஒத்துழைக்கும் நிலையில் மாணவியின் உடல்நிலை இல்லை என்றும் மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.