Published:Updated:

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மறைவு: கருணாநிதி இரங்கல்

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மறைவு: கருணாநிதி இரங்கல்
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மறைவு: கருணாநிதி இரங்கல்
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை: டெல்லி மாணவி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்  வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,"மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்த மாணவி டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி சிங்கப்பூரில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த  கவலையும்அடைந்தேன்.
 

##~~##
ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்  அண்மைக்காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும்  ஏழைப் பெண்களும் உள்ளாக்கப்படும் செய்தி
தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
 
இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது  அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும்  என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.