Published:Updated:

டெல்லி மாணவியின் பெயரை வெளியிட கோருகிறார் சசிதரூர்

டெல்லி மாணவியின் பெயரை வெளியிட கோருகிறார் சசிதரூர்
டெல்லி மாணவியின் பெயரை வெளியிட கோருகிறார் சசிதரூர்
டெல்லி மாணவியின் பெயரை வெளியிட கோருகிறார் சசிதரூர்

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி,சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்த மாணவியின் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மத்திய  அமைச்சர் சசி தரூர் கூறியுள்ள கருத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

விமானத்தில் எக்கனாமிக் கிளாஸ்-ல் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதை  போன்றுள்ளது என்பது போன்று அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கருத்து  சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்வது சசி தரூருக்கு வாடிக்கைதான்.

அதுபோன்றுதான் தற்போது டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி பலியான  சம்பவம் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,கற்பழிக்கப்பட்ட  மாணவியின் பெயர், விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பி  இருக்கும் அவர், அந்த விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி  இருக்கிறார்.

##~~##
கற்பழிப்புக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் வலுவானதாக திருத்தி அமைக்கப்பட  இருக்கிறது. மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், திருத்தப்பட்ட புதிய  சட்டத்திற்கு, அந்த மாணவியின் பெயரை சூட்டி கவுரவிக்க வேண்டும் என்றும், சசிதரூர்  யோசனை தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய சட்டத்தின்படி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்களை  வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் இணைய தளத்தில் டெல்லி மாணவி விவகாரம் குறித்து சசிதரூர்  வெளியிட்டு இருக்கும் கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணைய தளத்தில் பலர்  கருத்து தெரிவித்து உள்ளனர். சசிதரூரின் யோசனையை வரவேற்று சிலர் பாராட்டு  தெரிவித்து உள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்துள்ள சிலர், குற்றவியல் நீதித்துறையில் உண்மையான மாற்றங்களை  கொண்டுவருவதை விடுத்து, அந்த மாணவியை கவுரவப்படுத்துவது போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
சசிதரூரின் யோசனையை வரவேற்றுள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி,  புதிய சட்டத்திற்கு மாணவியின் உண்மையான பெயர் அல்லது ஊடகங்கள் அவருக்கு  சூட்டிய 'நிர்பயா' என்ற புனை பெயரை சூட்ட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.