Published:Updated:

டெல்லி சம்பவம்: நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி சம்பவம்: நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி சம்பவம்: நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி சம்பவம்: நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: டெல்லியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி,அவரது  மரணத்திற்கு காரணமாக இருந்த 6 குற்றவாளிகளுக்கு எதிரான 1000 பக்கங்கள்  கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை நாளை  தாக்கல்  செய்ய உள்ளது.

டெல்லியில் கடந்த 16 ஆம் தேதியன்று ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம்   செய்யப்பட்ட மாணவி, சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டும்,கடந்த 29 ம்  ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

டெல்லி மாணவியின் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நிலையில்,   இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற  கோரிக்கை வலுப்பெற்றுதால்,டெல்லி காவல்துறையும் அதில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் மாணவியை கொடூரமாக தாக்கி, பாலியல் பலாதகாரத்திற்கு உட்படுத்திய   ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6  பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 (கொலை) 307 (கொலை முயற்சி)  376 (2) (ஜி) (கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் 377, 365,  394, 396, 201, 34 ஆகிய 9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

##~~##
இவர்களுக்கு எதிராக 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி  காவல்துறை தயாரித்துள்ளது.இதனை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவால்துறை நாளை  தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக இவ்வழக்கின் விசாரணை  குறித்த தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய உள்ளது.
அந்த குற்றப்பத்திரிக் கையில் 16 ஆம் தேதி மாணவி பஸ்சில் பாலியல் பலாத்காரத்திற்கு  ஆளானது முதல் சிங்கப்பூர் மருத்துவ மனையில் 29 ஆம் தேதி மரணம் அடைந்தது  வரையிலான 13 நாள் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலங்கள், மாணவியின் நண்பர் கொடுத்த வாக்குமூலம்  தனி தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 24 ஆம் தேதி  சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் கொடுத்திருந்தார். தனக்கு நேர்ந்த  கொடூரத்தை அவர் முழுமையாக கூறி இருந்தார். அந்த வாக்கு மூலம் மாணவியின்  மரண வாக்குமூலமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாணவியின் மரண வாக்குமூலம் மிக, மிக வலுவானதாக கருதப்படுகிறது. இதையடுத்து தடயவியல் அறிக்கை, கண்காணிப்பு காமிராவில்  பதிவாகியுள்ள பஸ் காட்சிகளும் குற்றத்துக்கு ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. மாணவி  உடலுக்கு இறுதி பிரேத பரிசோதனை செய்த சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத்  மருத்துவமனை டாக்டரும் முக்கிய சாட்சிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவி மரணத்துக்கான அடிப்படை காரணத்தை இவர்தான் வெளியிட உள்ளார். எனவே  அவரது சாட்சியாமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி போலீசார்  தயாரித்துள்ள குற்றப்பத்திரிகைக்கு, டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர்  நர்மேந்திரகுமார் இன்று ஒப்புதல் அளித்தார்.நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டதும் உடனடியாக விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகள் 6  பேருக்கும் மரணத்தண்டனை விதிக்குமாறு காவல்துறை தரப்பில்  கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தினமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.தினமும்  விசாரணை நடக்கும் பட்சத்தில் இவ்வழக்கு விசாரணை ஒரு மாதத்தில் முடிந்து விடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது,குற்றவாளிகள் 6 பேருக்கும் மரணத்தண்டனை விதிக்குமாறு காவல்துறை தரப்பில் கோரப்படும்   எனத்தெரிகிறது.