Published:Updated:

டெல்லி: மீண்டும் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம்

டெல்லி: மீண்டும் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம்
டெல்லி: மீண்டும் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம்
டெல்லி: மீண்டும் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக தொடர்ந்து ஆவேசமான போராட்டங்கள்  நடைபெற்று வருகிற போதிலும்,டெல்லியில் மீண்டும் ஒரு மாணவி புத்தாண்டு  கொண்டாட்டத்தின்போது பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும்  17 வயது மாணவி ஷகிதா(பெயர் மாற்றம்).அதே பகுதியில் உள்ள சரோஜினி நகரை  சேர்ந்தவர் மணிஷ்(பெயர் மாற்றம்). இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது நண்பர்  கிஷோர் (பெயர் மாற்றம்) மல்டிநேஷனல் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி  வருகிறார்.

இந்நிலையில்  மணிஷ் கடந்த சில மாதங்களாக ஷகிதாவுடன் பேஸ்புக் இணையதளம்  மூலம் பழகி வந்தார். இந்நிலையில் மணிஷ், ஷகிதாவை தொடர்பு கொண்டு  புத்தாண்டை கொண்டாட அழைப்பு விடுத்தார்.இதை ஏற்று ஷகிதா அங்குள்ள மார்க்கெட்  பகுதிக்கு சென்றார்.

##~~##
அப்போது அவரை மணிஷ் தனது காரில் ஏற்றிக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு கிஷோரும் இருந்தார்.இதனையடுத்து   ஷகிதாவுக்கு மயக்க குளிர்பானத்தை கொடுத்தனர். அதை குடித்ததும் ஷகிதாவுக்கு  மயக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மயக்கம் தெளிந்ததும் ஷகிதா தனக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி கதறி அழுதார்.  ஆனால் மணிஷ்,இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக  மிரட்டினராம்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பிய ஷகிதா,சப்தர்ஜங் போலீஸ் நிலையம் சென்று  தன்னை 2 பேர் மயக்க குளிர்பானம் கொடுத்து சீரழித்துவிட்டதாக புகார் அளித்தார்.
இதையறிந்ததும் தெற்கு டெல்லி இணைகமிஷனர் விவேக்கோகியா குற்றவாளிகளை  பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல்  வேட்டையில் மணிஷ்,கிஷோர் இருவரும் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் சாகேத்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர்.