Published:Updated:

சுருளி மலை இரட்டைக் கொலை வழக்கு.! – பின்னணியும் திருப்பம் உண்டாக்கிய ஜூனியர் விகடன் செய்தியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுருளி மலை இரட்டைக் கொலை வழக்கு.! – பின்னணியும் திருப்பம் உண்டாக்கிய ஜூனியர் விகடன் செய்தியும்
சுருளி மலை இரட்டைக் கொலை வழக்கு.! – பின்னணியும் திருப்பம் உண்டாக்கிய ஜூனியர் விகடன் செய்தியும்

சுருளி மலை இரட்டைக் கொலை வழக்கு.! – பின்னணியும் திருப்பம் உண்டாக்கிய ஜூனியர் விகடன் செய்தியும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்படத்துவங்கியது. இதுவரை இப்படி ஒரு வழக்கையும், இப்படி ஒரு தீர்ப்பையும் இந்த நீதிமன்றம் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.! கடந்த 2011ம் ஆண்டு சுருளி அருவியில் நடந்தேறிய இரட்டைக் கொலைவழக்கு தான் அது. கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும், எழில் முதல்வன் என்ற இளைஞனும் சுருளி அருவியில் இருந்து கைலாசநாதர் குகைக் கோவிலுக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். முதலில் தற்கொலை என்று சொல்லி வழக்கை முடிக்க நினைத்த போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தனர் கம்பம் பகுதி பத்திரிகையாளர்கள். தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இறுதியாக, கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்ட வெள்ளை என்ற திவாகர் பிடிபடுகிறான்.

ஜூனியர் விகடனால் திசை மாறிய வழக்கு :

’’என்ன தான் போலீசார் அவனை பிடித்தாலும் கடைசி வரை அவனை காப்பற்றவே நினைத்தார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால் அவன் ஜாமினில் வெளியே வந்துவிட்டான். அந்த சமயம், 26.06.2011 தேதியிட்ட ஜூனியர் விகடனில் சுருளி மலையில் நடந்த கொலை சம்பவத்தை வைத்து ஒரு கட்டுரை வெளியானது. அதில், பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இனி, போலீசாரை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை என்பதை ஜூனியர் விகடனை படித்த பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. உடனே, வழக்கை சி.பி.சி.ஐ.டி’க்கு மாற்றக் கோரிக்கை வைத்தோம். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி கைக்குச் சென்றது. இதுவரை 65ற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்து இருநூறு பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். இறுதியாக, கட்டவெள்ளை என்ற திவாகருக்கு ஒரு ஆயுள் தண்டனை, இரட்டை 7வருடக் கடுங்காவல் தண்டனை மற்றும்  தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி செந்தில் குமரவேல். எட்டு வருடங்களாக நாங்கள் பட்ட வேதனைக்கு இப்போது தான் நிவாரணம் கிடைத்திருக்கிறது.!

அன்று மட்டும் நாங்கள் ஜூனியர் விகடனை படிக்கவில்லை என்றால் இதெல்லாம் நடந்திருக்காது. யார் இவன், இவனது பின்புலம் என்ன? இதுவரை என்னென்ன குற்றங்கள் செய்திருக்கிறான்? இதுவரை எத்தனை பெண்களை நாசம் செய்திருக்கிறான்? போலீசாருக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என விரிவாக செய்தி வெளியிட்டது ஜூனியர் விகடன். அதனால் தான் நாங்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டோம். இல்லையென்றால் இவனை போலீசாரே தப்பிக்க விட்டிருப்பார்கள்.!’’ என்றார் கொலையான எழில் முதல்வனின் அப்பா தங்கநதி.

உயிரைப் பறித்த ஒன்றே முக்கால் பவுன் செயின் :

‘’சம்பவம் நடந்த பிறகு கஸ்தூரியின் உடலை அவர்களின் பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். நாங்கள் கஸ்தூரியின் உடலைப் பெற்று, எழில் முதல்வனின் உடல் மேலே கஸ்தூரி உடலை வைத்து அடக்கம் செய்தோம். எனக்கு தெரிந்த வரை என் அண்ணன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை. அமைதியாக இருப்பான். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது கூட அவர்களின் மரணத்தில் தான் தெரிந்தது. என் அண்ணனும், கஸ்தூரியும் பி.ஏ பி.எட் படித்தவர்கள். ஆசிரியர்களாக மாற வேண்டியவர்களை கஸ்தூரி அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க சங்கிலிக்காக இருவரையும் கொலை செய்திருக்கிறான் கட்டவெள்ளை. இப்படிப் பட்ட கொடூரனுக்கு தூக்கு தண்டனை கூட போதாது என்று தான் நினைக்கிறேன்.!’’ என்றார் எழில் முதல்வனின் தம்பி தாமரைக் கண்ணன்.

வழக்கின் பிண்ணனி :

காதலர்களாக கஸ்தூரியும் எழில் முதல்வனும் சுருளி மலைப் பகுதியில் தனிமையில் இருந்த போது அங்கு வந்த கட்டவெள்ளை, தனது கையில் வைத்திருந்த அருவாளால் (தென்னங்காய் வெட்டும் தொழில் செய்பவன்.!) எழில் முதல்வனை மிரட்டி, கஸ்தூரி அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் செயினை கேட்டிருக்கிறான். பயந்து போன கஸ்தூரி, செயினை கழட்டி கொடுத்திருக்கிறார். யாரும் இல்லா காடு என்பதால், கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்திக்கிறான் கட்டவெள்ளை. இதனை எழில் முதல்வன் அனுமதிக்காத நிலையில், எழில் முதல்வனின் கழுத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்கிறான். இதனைக் கண்ட கஸ்தூரி அலறியடித்து ஓட முயற்சிக்க, அவரின் காலில் வெட்டியுள்ளான் கட்ட வெள்ளை. கீழே விழுந்த கஸ்தூரியை உடலின் பல இடங்களில் வெட்டியுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியை பாலியல் வன்புணர்வு செய்து இறுதியில் கொலை செய்துவிட்டு தப்பிவிடுகிறான். சந்தேக மரணம் என்று முதலில் சொல்லி, பிறகு காதலர்கள் இருவரும் தற்கொலை செய்துவிட்டார்கள் என்று கதை கட்டி, குற்றவாளி  கட்டவெள்ளையை காப்பாற்ற நினைத்த இராயப்பன்பட்டி போலீசாருக்கு மத்தியில், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் நேர்மையான விசாரணையை பாராட்டியே ஆக வேண்டும்.

1996ம் ஆண்டு தேனி மாவட்டம் உருவான பிறகு, 2006ம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு