Published:Updated:

டெல்லி மாணவி வழக்கில் கைதான 2 பேர் அப்ரூவராக விருப்பம்

விகடன் விமர்சனக்குழு
டெல்லி மாணவி வழக்கில் கைதான 2 பேர் அப்ரூவராக விருப்பம்
டெல்லி மாணவி வழக்கில் கைதான 2 பேர் அப்ரூவராக விருப்பம்
டெல்லி மாணவி வழக்கில் கைதான 2 பேர் அப்ரூவராக விருப்பம்

புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் கைதான  6 குற்றவாளிகளில் இரண்டு பேர், அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக  விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைதான 6 குற்றவாளிகளில் 4 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி கிளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களில் பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய இரு குற்றவாளிகள், தங்களுக்கு சட்ட உதவி வழக்கறிஞர் தேவையில்லை என்றும், அப்ரூவராக மாற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.டிரைவர் ராம் சிங்கும் அவரது சகோதரர் முகேஷும் சட்ட உதவி வழக்கறிஞர் வேண்டும் எனக் கேட்டனர்.

##~~##
வழக்கமாக வழக்கு விசாரணையில் ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் குற்றவாளியை அப்ரூவராக மாறும்படி விசாரணை அதிகாரிகள் கேட்டுக் கொள்வர். இதனால் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ, அல்லது குறைந்த தண்டனை பெற முடியும். ஆனால் இந்த கொடூர பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் சாட்சிகளாக மாறுவதால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை 19 ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, குற்றப்பத்திரிக்கை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் இன்றும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.