Published:Updated:

பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்புக்கு பீகாரிகளே காரணம்: ராஜ் தாக்கரே

பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்புக்கு பீகாரிகளே காரணம்: ராஜ் தாக்கரே
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்புக்கு பீகாரிகளே காரணம்: ராஜ் தாக்கரே
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்புக்கு பீகாரிகளே காரணம்: ராஜ் தாக்கரே

மும்பை: நாட்டில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிரித்து வருவதற்கு பீகாரிகளே காரணம் என்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கொங்கன் பிராந்திய திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,"சமீப காலமாக எல்லாரும் டெல்லியில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே பேசுகிறார்கள். ஆனால், அந்த கொடூர குற்றத்தை செய்தது யார் என்பது பற்றி யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக எனக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால், டெல்லியில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதை யாரும் கூற மறுக்கிறார்கள்.

##~~##
நாடு முழுவதுமே அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இது மிகவும் கவலைக்குரியது. அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு பீகாரிகளே காரணம்.
வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் இவர்கள்தான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
மும்பையை போலவே கொங்கன் பிராந்தியத்திலும் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.இப்படியே போனால்,கொங்கன் பிராந்தியம் முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் வெளி மாநிலத்தவர்களுக்கு சொந்தமாகிவிடும்.இதற்கு மேல் கொங்கனில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதை எங்கள் கட்சி அனுமதிக்காது" என்றார்.

இதனிடையே ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.