Published:Updated:

சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...

சுயேச்சைகளை ஜெயிக்க வைச்சது எது?

சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...

சுயேச்சைகளை ஜெயிக்க வைச்சது எது?

Published:Updated:
சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...

'2011-ல்  ஆட்சி அமைப்போம்... 2016-ல் ஆட்சி அமைப்போம்!’ என்றெல்லாம் முழங்கிய சில அரசியல் கட்சிகளே, இரண்டு நகராட்சிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சுயேச்சைகள் ஐந்து நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். சுயேச்சைகளுக்கு எப்படி இந்த மகுடம் கிடைத்தது?

காயல்பட்டினம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...
##~##

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைப் பொறுத்தவரை பல்வேறு முஸ்லிம் அமைப்புக்​களின் 'ஜமாத்’ கை காட்டும் நபரே உள்ளாட்சித் தேர்தலில் தலைவர், உறுப்பினர் ஆக முடியும். பெரும்பாலும் தேர்தல் இல்லாமலே அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படியே தேர்தல் நடந்தாலும்கூட, அதில் போட்டியிட விரும்புவோர் இடையே முதலில் உள்தேர்தல் நடத்தப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் வேட்பாளர் ஆவார். அப்படி வேட்பாளராக ஆக்கப்பட்ட மைமூனத்துல் மிஸ்ரியாவை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் களம் இறங்கவில்லை. ஆனால், 'ஜமாத் கொள்கைகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட உள்ளூர்வாசிகள்’, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 'மற்றவர்கள்’ இன்னொரு இஸ்லா மியப் பெண்ணான ஆபிதாவை வேட் பாளர் ஆக்கி கோதாவில் இறங்கினர். கடைசியில், ஆபிதா சுமார் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டார். ஜமாத் தீர்மானத்​தின்படி காயல்​பட்டினம் நகரப் பகுதியில் அரசியல் கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில், புறநகர் பகுதியான 12, 15-வது வார்டுகளில் மட்டும் அ.தி.மு.க., பி.ஜே.பி. போன்றவை களம் இறங் கியும், மொத்தம் உள்ள 18 வார்டுகளிலும் வென்றது சுயேச்​சைகள்தான்.

நரசிங்கபுரம்

சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...

நகராட்சிகள் நிலவரம் பற்றி எழுதியபோதே, சேலம் மாவட்டம் இந்த நகராட்சியில் காட்டுராஜா (எ) பழனிசாமிக்கே மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதை சொல்லி இருந்தோம். அ.தி.மு.க-வின் காட்டுராஜா, 2001-ல் போட்டியிட்டு நகரமன்றத் துணைத் தலைவராக இருந்தார். 2003-ல் செல்வ​கணபதியுடன் தி.மு.க-வில் இணைந்தார். தி.மு.க-வில் ஸீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். சமீபத்தில், நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர், தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்புதான் வெளியே வந்து பிரசாரம் செய்தார். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலும் நல்ல தொடர்பு வைத்திருந்தவர், ஓட்டு கேட்டுச் செல்லும்போது அழுது சென்ட்டிமென்ட் 'டச்’ கொடுத்தார். வேட்பாளர் கண்ணீர் விடுவதைப் பார்த்த மக்கள் அவரையே வெற்றி பெறவைத்துவிட்டார்கள். அ.தி.மு.க-வைவிட சுமார் 1,000 ஓட்டுகள் அதிகம் வாங்கி வென்ற அவருக்கு மொத்தம் உள்ள 18 வார்டுகளில், இவரது ஆதரவாளர்கள் நான்கு பேர்தான் வென்றவர்கள். எனவே, காட்டுராஜா அ.தி.மு.க-வை அனுசரித்தால் மட்டுமே, தனிக் காட்டு ராஜாவாக ஆள முடியும்.

குமாரபாளையம்

இது, அமைச்சர் தங்கமணியின் சொந்தத் தொகுதியான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி. சுயேச்சை வேட்பாளர் சிவசக்தி தனசேகரன், டெக்ஸ்டைல் உரிமையாளர். பக்கா அ.தி.மு.க-காரர். கட்சியில் குமார​பாளையம் தொகுதி இணைச் செயலாளராக இருக்கும் இவர் அ.தி.மு.க. சார்பில் நகராட்சி சேர்மன் பதவிக்குப் போட்டியிட ஸீட் கேட்டிருந்தார். ஆனால், நாகராஜ் என்பவருக்குத்தான் கிடைத்தது. கடுப்பான சிவசக்தி தனசேகரன் சுயேச்சையாக மோதினார். குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காளியம்மன் திருவிழாவின்போது பல நற்பணி மன்றங்கள், லோக்கல் கலைஞர்களை வைத்தே நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால், சிவசக்தி தனசேகரனின் அம்மன் நகர் நற்பணி மன்றம் சென்னையில் இருந்து ஸ்டார்களைக் கூட்டி வந்து நிகழ்ச்சிகள் நடத்துவதால், அவர் ரொம்பவே ஃபேமஸ். அ.தி.மு.க-வினர் மத்தியிலும் நல்ல பெயர் இருப்பதால், 4,805 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அனகாபுத்தூர்

சொந்த செல்வாக்கா... சொந்தக் கட்சி உள்குத்தா...

18 வார்டுகள் உட்பட 29,600 வாக்காளர்களைக் கொண்டுள்ள அனகாபுத்தூர், காஞ்சி மாவட்​டத்தின் குட்டி நகராட்சி. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளை நுரை தள்ள​வைத்து​விட்டு வெற்றிக் கனியைப் பறித்திருக்​கிறார் சுயேச்சை வேட்​பாளர் அனகை வேலா​யுதம். இவரும் அடிப்​படையில் அ.தி.மு.க​-காரர்தான். 2001, 2011 சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இப்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் தலைமை தன்னைப் புறக்கணித்ததால், தனிக் கடை போட்டு அமோகமாகக் கல்லாவை நிறைத்துவிட்டார்.

2001-06 வரை நகராட்சியாக மாற்றம் பெறாத அன்றைய அனகாபுத்தூர் பேரூராட்சியின் தலைவராக இருந்தபோது செய்த பணிகளே அவரை இப்போது நகராட்சி சேர்மன் பதவியில் உட்கார வைத்திருக்கிறது. காதுகுத்து, கபடி போட்டி, கல்யாணச் செலவு என்று ஏதாவது ஒரு ரசீது புக் எடுத்துக்கொண்டுபோய் நீட்டினாலும், தவறாமல் ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பு வார். 'கட்சியை எதிர்த்து களத்துல நிற்கணும்னு நான் சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க. துரோ​கிங்க சிலர் செய்த சதியால்தான் தனியாக நின்றேன்!'' என்று சொல்கிறார் வேலாயுதம்.

போடி

போடி அ.தி.மு.க வேட்பளராக அறிவிக்கப்பட்ட பழனிராஜுக்கு எதிர்ப்​புக் கிளம்பியதால், நகரச் செய​லாளர் பாலமுருகன் அதிகாரபூர்வ வேட்பாளரானார். 'நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் சார்ந்த செட்டியார் சமூகம் முடிவு செய்துவிட்டது’ எனக் களத்தில் குதித்த பழனிராஜ், பாலமுருகனை 11 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே தனது பிரசாரத்தைத் துவக்கிய பழனிராஜ், தனது வட்டிக் கடையைத் திறந்து லட்சங்களை இறக்கினார். இவர் சீனியர் அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால், ஆளும் கட்சிக்காரர்கள் பலர் இவரை ஆதரித்து மறைமுகமாக தேர்தல் வேலை செய்தனர். இவரைப் போல், அ.தி.மு.க-வின் அதிருப்தி வேட்பாளரான சேதுராமன், அவர் சார்ந்த மறவர் சமூக ஓட்டுகளைக் கணிசமாகப் பிரித்தால் நமது வெற்றி எளிது என கணக்குப் போட்ட பழனிராஜ் தரப்பு, எதிர் முகாமினை கவனமாகப் பார்த்து வந்தது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய அனைத்து ரவுண்டுகளிலும் ஆளும் கட்சிக்கு 'டஃப்’ கொடுத்த பழனிராஜ், கடைசியில் சொற்ப வெற்றியில் சேர்மன் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

- ஜூ.வி. டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism