Published:Updated:

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

Published:Updated:

'இப்ப இன்னான்ற...’ என்று கைலியைத் தூக்கிக் கட்டிக்​கொண்டு... கண்களைச் சிமிட்டி... உதட்டைச் சுழற்றி 'லூஸ்’ மோகன் உச்சரிக்கும் சென்னைத் தமிழைக் கேட்டால், கொங்கு ரசிகனும் குபீரென்று சிரிப்பான். 'சட்டம் என் கையில்’ படத்துக்காக கமலுக்கு சென்னைத் தமிழ் கற்றுக் கொடுத்த வாத்தியார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று கிட்டத்தட்ட 1,000 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்டார். எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மோகன், கடந்த 19-ம் தேதி குலுங்கிக் குலுங்கி அழுதபடி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தன் மகன் மீது புகார் கொடுத்தார்.

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயிலாப்பூர் பகுதி அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் லூஸ் மோகனை சந்தித்தோம்.

''எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். மூணு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்துட்டேன். கடைக்குட்டிதான் கார்த்தி.  13 வருஷத்துக்கு முன்னாடி என் மகனுக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணிவைச்சேன். மெட்ராஸ்ல சுனாமி வந்துச்சே... அதுக்கு முதல் நாள் என் பொஞ்சாதிக்கு, திடீர்னு நெஞ்சுவலி வந்து... ஒரேயடியாப் போய் சேர்ந்துட்டா. அந்தப் புண்ணியவதி போனப்புறம் நான் ஜீரோனு அநாதை ஆயிட்டேன்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி தலைகாணி தடுக்கிக் கீழே விழுந்து இடுப்பு எலும்பு, மூட்டு எலும்பு முறிஞ்சுடுச்சு. அப்போ ரஜினி தன்னோட ராகவேந்திரா அறக்கட்டளை மூலமா உதவினார். லதா மேடமும் உதவி  செஞ்சாங்க. ராதாரவி, நடிகர் சங்கம் மூலமா உதவினார். ஜி.கே.வாசன் உதவினார்.

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

எனக்கு இப்போ 84 வயசு ஆச்சு. என்னிக்கு டிக்கட் வாங்குவேன்னு எனக்கே தெரியாது. அது வரைக்கும் நிம்மதியா இருக்கறதுக்கு உதவறதுதானே உறவு... நான் என்ன காசு, பணமா கேட்குறேன். வேளாவேளைக்கு சோறு, மருந்து, மாத்திரைதானே கேட்குறேன். இதுகூட இல்லேன்னா அப்புறம் எதுக்கு உறவு? ரெண்டு மூணு நாளா ரொம்பவும் நொந்துட்டேன். அதான் கமிஷனர் ஆபீஸ் போய் புகார் கொடுத்தேன். இப்போ என்னோட விஷயம் தெரிஞ்சு, மயிலை பெரியசாமி வீடு தேடி வந்தார். வேளாவேளைக்கு எனக்கு வேண்டிய சாப்பாட்டைத் தரச் சொல்லிட்டுப் போயிருக்கார். காலையிலும் சாயங்காலமும் ரெண்டு இட்லிதான் என் சாப்பாடு...'' என்று கண் கலங்கினார்.

''டிக்கெட் வாங்குற வரைக்கும் ரெண்டு இட்லி தந்தா போதும்''

''சார் அவர் சொல்ற எல்லாத்தையும் நம்பி, அப்படியே போட்டுறாதீங்க சார். எங்க குடும்பத்தோட மானத்தை ஒரே நாள்ல வாங்கிட்டார்...'' என்று கலங்கியபடி பேசத் தொடங்கினார் மோகனின் இரண்டாவது மகள் கீதா.

''என் தம்பி ரொம்ப நல்லவன் சார். அவனைப் போய் குறை சொல்றாரே எங்க அப்பா. அவர் பெத்த பொண்ணுங்க நாங்க பக்கத்துல இருந்து பார்த்துக்கறதைவிட, அன்பா அனுசரணையா பார்த்துக்கிடுறா என் தம்பி மனைவி. அப்பா இடுப்பு மூட்டு எலும்பு ஆபரேஷன் முடிஞ்சி வீட்டுல இருந்தப்போ அவருக்கு காலைக் கடன் போறது, டிரெஸ் மாத்திவிட்டது எல்லாமே என் தம்பியும் அவன் மனைவியும்தான். இரண்டு நாள் முன்னாடி தம்பியோட மாமனார், மாமியார் வந்திருந்தாங்க. அவங்ககிட்டே எங்க அப்பா ஏதோ கோபமாக் கத்தியிருக்கார். அதனால வருத்தப்பட்டு தம்பியும் மனைவியும் வெளியே தங்கிட்டாங்க. அப்போதான், இவர் கமிஷனர் ஆபீஸ் போயிருக்கார்...'' என்று சொன்னார்.

மோகனால் புகார் பத்திரம் வாசிக்கப்பட்ட அவரது மகன் கார்த்தியிடம் பேசினோம். ''அப்பப்போ அப்பா கோபப்படுறது இயல்பு. வீட்டுக்கு வீடு வாசப்படி. எல்லா குடும்பத்துலயும் இருக்குற சாதாரணப் பிரச்னைதான் இது. இதை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோவார்னு எதிர்பார்க்கலை. 'உன்னை போலீஸ் யாரும் விசாரிக்க மாட்டாங்க... என்னை சரியா கவனிக்கலேன்னாத்தான் விசாரிக்கச் சொல்லி இருக்கேன்’ என்று என்னிடம் தெளிவாகச் சொல்கிறார். உலகையே சிரிக்கவைத்த அப்பாவை எந்த மகனாவது அழவைப்பானா?'' என்று விரக்தியாக விளக்கம் கொடுத்தார்.

மகன் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய புகாரையும் லூஸ்மோகன் வாபஸ் வாங்கி விட்டார்.

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism