Published:Updated:

அ.தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்தாரா ஓ.பி.எஸ்.?

போடி உள்குத்து...

அ.தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்தாரா ஓ.பி.எஸ்.?

போடி உள்குத்து...

Published:Updated:

நாடு முழுவதும் ஆளும் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை, இரட்டைத் தீபாவளியாகக் கொண் டாடி வரும் நேரத்தில், போடியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு அடித்து நொறுக்கப் படவே, ஏகப் பரபரப்பு கிளம்பியுள்ளது!

அ.தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்தாரா ஓ.பி.எஸ்.?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கு நகராட்சி சேர்மன் வேட்பாளராக ஓ.பி.எஸ். ஆதரவாளரும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவருமான பழனிராஜ் முதலில் அறிவிக்கப்பட்டார். இதைக் கடுமையாக எதிர்த்த நகரச் செயலாளர் பாலமுருகன், தனது பிரமலைக் கள்ளர் சமூகப் பிரதிநிதிகளுடன் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தனக்கு வாய்ப்பு கேட்டார்.  அமைச்சரோ தட்டிக் கழித்திருக்கிறார். உடனே மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வனைச் சந்தித்துப் பேசவே, பாலமுருகன் வேட்பாளராக மாற்றி அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்தாரா ஓ.பி.எஸ்.?

உடனே, 'சிங்காரித்து மூக்கறுத்த கதையாக இருக்கிறது’ என உள்ளுக்குள் கொதித்த செட்டியார் சமூகத்தினர், பழனிராஜனை சுயேச்சையாக நிறுத்தினார்கள். பால முருகனை எதிர்த்து,மறவர் சங்கத் தலைவ ராகவும், அ.தி.மு.க நகராட்சி துணை சேர்மனுமான சேதுராமனை சுயேச்சை வேட்பாளராக மறவர் தரப்பினரும் களம் இறக்கினார்கள்.

'போட்டி வேட்பாளர்களை வாபஸ் வாங்கவைக்கும் முயற்சியில் அமைச்சர் ஓ.பி.எஸ். சரியாக ஒத்துழைக்கவில்லை’ என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். பாலமுருகன், ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியில் உழைத்தார். ஆனாலும் பழனிராஜிடம் 11 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் கோபமடைந்த பாலமுருகன், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து நேராக ஓ.பி.எஸ். வீட்டுக்குத் தனது ஆட்களுடன் போய் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டதால், போலீஸ் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

நடந்த சம்பவம் குறித்து பாலமுருகனிடம் பேசினோம். ''எனது தோல்வியால் கட்சிக்காரர்கள் வேதனை அடைந்து ஆத்திரத்தில் அப்படி நடந்து கொண்டார்கள். தேர்தலில் எனக்கு நடந்த கொடுமைகள் ஊருக்கே தெரியும்...'' என்று ஆவேசப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஒ.பி.எஸ். தரப்பில் அவரது தம்பியும் தற்போது பெரியகுளம் நகராட்சி சேர்மன் வெற்றி வேட்பாளருமான ராஜா விடம் பேசினோம். ''அதிருப்தி வேட்பாளரான பழனி ராஜனை வாபஸ் வாங்க வைத்திட, அமைச்சர் அவர் வீட்டிற்கே போய் பேசினார். அதேபோல் சேதுராமனிடம் பலரும் பேசினார்கள். ஆனால் இருவரும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?'' என்றார்.

மாவட்டச் செயலாளர் தங்கதமிழ் செல்வன், ''கட்சியினரை சந்தித்து அமைதிப்படுத்தி வருகிறேன். தோல்வி அடைந்த விரக்தியில் அமைச்சர் வீட்டை சேதப்படுத்திய இருவரை போலீஸில் சரண டைய வைத்தேன். விரைவில் சமரசம் செய்திடுவோம்'' என சொன்னார்.

- இரா.முத்துநாகு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism