Published:Updated:

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!

Published:Updated:

புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், 10-ம் வகுப்பு தனித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கு, அந்த மாநில அரசியலையே தடதடக்க வைத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கடந்த 09-10-2011 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவாக வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து, அமைச்சர் கல்யாணசுந்தரத்தை தமிழக போலீஸ் தேட... அவரோ முன்ஜாமீன் கேட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்!

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது, 'தீர்ப்பு வரும் வரை கல்யாணசுந்தரத்தின் மீது எவ்விதக் கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டது. இது ஒருபுறம் இருக்க... மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியோர் ஒவ்வொரு பள்ளியாக சென்று மாணவர்கள் மத்தியில் நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள். அதில், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான வழக்கு தொடர்பான முழு விவரங்களை அச்சடித்து உள்ளனர். 'அமைச்சரைக் காணவில்லை, கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்’ என்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

இவ்வளவு பரபரப்புக்கும் இடையில், முதலமைச்சர் ரங்கசாமி மட்டும் எந்தக் கருத்தும் சொல்லாமல், மௌனியாகவே இருக்கிறார். இதற்குக் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரம் கூறுவதுதான் காமெடியின்உச்சம். ''ஜாதகம், ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ரங்க சாமி. தேர்தலுக்கு முன்பு அவரது ஜாத கத்தைக் கணித்த ஜோசியர்கள், புதுவை யின் சனி மூலை யாக அமைந்திருக்கும் அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் காலாப் பட்டு தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சொல்லி இருந்தார்கள். அதனாலேயே அவர் தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை

புதுவையில் ஆள்மாறாட்ட பாலிடிக்ஸ்!

வெளியிடும்போது, முதன் முதலில் அறிவித்தது காலாப்பட்டு தொகுதியைத்தான். தேர்தல் பிரசாரத்தையும் அந்தத் தொகுதியில் இருந்துதான் துவங்கினார். அதனால்தான் முதல் முறை எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரத்துக்கு அமைச்சரவையில் தனக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தைக் கொடுத்தார்...'' என சொல்கின்றன அந்த வட்டாரம்.

எதிர்க் கட்சியினரோ கிண்டலாக, ''சனி மூலைக்கே, சனி பிடித்துவிட்டதே... இப்போது என்ன செய்வார் ரங்கசாமி?'' என கமென்ட் அடிக்கின்றனர்.

எல்லாம் சரி... ஜாதகம் பார்ப்பது, ஜோசியர் சொல் கேட்பது எல்லாம் ரங்கசாமியின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவற்றை எல்லாம் அரசாங்கத்தில் திணிப்பது நியாயமா?

- டி.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism