Published:Updated:

சங்கரசுப்பு மகன் மர்மம்...

கண்டுபிடிப்பாரா சலீ்ம் அலி?

சங்கரசுப்பு மகன் மர்மம்...

கண்டுபிடிப்பாரா சலீ்ம் அலி?

Published:Updated:

யர் நீதிமன்ற வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் கொலை நடந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் இது வரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. திணறி வருவதற்கு உயர் நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ-யின் இயக்குனர் ஏ.பி.சிங்-கையே நேரில் ஆஜராகி விளக்கம் சொல்லும் வகையில் தேதியை சொல்லும்படி சி.பி.ஐ-யின் வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். வக்கீல் அளித்த பதிலில், ''சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங் முக்கிய பணிகள் காரணமாக ஆஜராக முடியவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த சிறப்புக் குழுவினர் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சி.பி.ஐ-யின் கூடுதல் இயக்குனர் சலீம் அலி மேற்பார்வையிடுவார். ஒரு மாதத்தில் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கோர்ட் ஏற்றுக்கொண்டது.

யார் இந்த சலீம் அலி?

சங்கரசுப்பு மகன் மர்மம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

1978-ல் ஐ.பி.எஸ். தேறியவர். மணிப்பூர் - திரிபுரா மாநில போலீஸ் கேடர். பூர்வீகம் சென்னை வேளச்சேரி. கடந்த மாதம் வரை திரிபுரா மாநில டி.ஜி.பி-யாக பணியாற்றியவர், டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் டெபுடேஷனில் வந்தார். இந்த மாதம் 13-ம் தேதியன்று, சதீஷ் குமார் கொலை வழக்கைத் துப்பறியும் டீமின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கும் சென்னைக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. வி.ஐ.பி-களைக் கண்காணிப்பதற்காக சி.பி.ஐ-யின் ஒரு ஸ்பெஷல் பிரிவை 1990-வாக்கில் சென்னையில் ஆரம்பித்தார்கள். அந்தப் பிரிவின் முதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டவர் இவர். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்தபோது, அதன் உளவுப் பிரிவு எஸ்.பி-யாக இருந்தவர். இவர் டிப்ஸ் கொடுத்துதான், தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த நளினி மற்றும் முருகனை சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்தனர். சிவராசன், தணு இருவரும் டேங்கர் லாரியில் தப்பிக்கும்போது, அதுபற்றி தகவல் கொடுத்து லாரி உரிமையாளர் மேட்டூர் தனசேகரனை போலீஸார் வளைப்பதற்குப் பின்னணியில் இருந்தவரும் இதே சலீம் அலிதான். எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டாலும் சதீஷ் குமார் மரணம், இன்னமும் மர்மமானதுதான்.

சலீம் அலி என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்!

- ஆர்.பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism