Published:Updated:

நிம்மதியி்ல் உத்தப்புரம்!

ரீ.சிவக்குமார்

நிம்மதியி்ல் உத்தப்புரம்!

ரீ.சிவக்குமார்

Published:Updated:
நிம்மதியி்ல் உத்தப்புரம்!

த்தப்புரம் - தமிழக வரலாற்றில் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்குமான உதாரணப் பெயராகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால், இப்போது கலெக்டர் சகாயம், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் ஆகிய இருவரின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உருவாகி உள்ளது. இந்த ஒப்பந்தப்படி தலித் மக்களின் பெருவாரியான பிரச்னை கள் தீர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். வெற்றி மகிழ்ச்சியில் இருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சம்பத்திடம் பேசினோம்.

''இந்த உத்தப்புரம் ஒப்பந்தம் என்பது,  தீண்டாமை எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் நடந்த குறிப்பிடத்தக்க திருப்புமுனை. இந்த ஒப்பந்தத்தின்படி, முத்தாலம்மன் கோயிலில் நுழைய தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட அனுமதி, இப்போது விலக்கப்பட்டுவிட்டது. அதனால் நிம்மதியாக முதல் முறையாக முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழையப்போகிறார்கள் தலித் மக்கள். அதே போல், 22 ஆண்டுகளாக அரசமர வழிபாடு செய்வதற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது. இப்போது அதற்கும் அனுமதி கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

தீண்டாமைச் சுவரை இடித்து, பொதுப்பாதை ஏற்படுத்தப் பட்டு இருந்தாலும், அதைத் தலித் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இருந்தது. இப்போது முழுச் சுதந்திரத்துடன் தலித் மக்கள் அந்தப் பாதையில் செல்வ தற்கு சம்மதம் தெரிவித்து இருக் கிறார்கள், சாதி இந்துக்கள். 'பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்று அதிகாரிகள் உறுதி தெரிவித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட உத்தப்புரத்தில் வழக்கு இல்லாத தலித் வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'தலித் மக்கள் தங்களுக்கு சரிசமமாக உட்கார்ந்துவிடக் கூடாது’ என்பதற்காக இதுவரை நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்தது. இப்போது நிழற்குடை அமைப்பதற்கும் வழி பிறந்திருக்கிறது.

நிம்மதியி்ல் உத்தப்புரம்!

மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், எஸ்.பி ஆஸ்ரா கர்க் ஆகிய இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். சாதிப் பிரச்னைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த இரு தரப்பு மக்களும் ஒரே மாதிரியான பொருளாதார நிலைகொண்டவர்கள். ஏழை எளிய மக்கள். இனி அவர்கள் பொதுப் பிரச்னைகளுக்காக இணைந்து போராடலாம். இரண்டு தரப்பு மக்களிடமும் இருந்துவந்த பூசல், அமைதியின்மை இனி இருக்காது. இன்னும் தீர்க்கப்படாத சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஊர்ச் சாக்கடை இப்போது தலித் மக்கள் பகுதியில் கலக்கிறது. அது ஊருக்கு வெளியே சென்று கலக்கும்படி செய்ய வேண்டும். சாலைகள், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட வேண்டும். நிச்சயம் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்கிறார் சம்பத்.

உத்தப்புரத்து வெளிச்சம், நாடெங்கும் வழி காட்டட்டும்!

படம்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism