Published:Updated:

நாமக்கல்: 12,000 லிட்டர் கலப்பட டீசல்; தமிழ்நாடு முழுக்க நெட்வொர்க்! - 3 பேர் கைது

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்

எவ்வித ஆவணமும் இன்றி, சட்ட விரோதமாக, அதிக லாபத்துக்காக விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 12,000 லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டீசல் கலப்பட டீசல் என்பதும், போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பரமத்திவேலூர் அருகே, விற்பனை செய்வதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட 12,000 லிட்டர் கலப்பட டீசலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்து, மூன்று பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
`₹500 வேண்டாம், ₹100 நோட்டா கொடுங்க!' - சில்லறை கேட்பது போல் நூதன மோசடி செய்த கும்பல்; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் திலகவதி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் பரமத்தி வேலூர் அருகேயுள்ள வீரணம்பாளையத்தில் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரணம்பாளையத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்துக் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் லாரி ஒன்று நிற்பதைப் பார்த்தனர். உடனே, அந்த லாரியைச் சோதனை செய்தனர். அதில், எவ்வித ஆவணமும் இன்றி, சட்ட விரோதமாக அதிக லாபத்துக் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 12,000 லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டீசல் கலப்பட டீசல் என்பதும், போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், இராந்தகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜெயசீலன் (36), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த லாரி கிளீனர் குபேந்திரபாண்டியன் (35), பரமத்தி வேலூர் அருகேயுள்ள கரையாம்புதூரைச் சேர்ந்த குப்புசாமி (எ) குணசேகரன் (49) ஆகிய மூன்று பேரையும் நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தலைமறைவான சென்னை கொருக்குப்பேட்டையேச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரைத் தேடிவருகின்றனர். இப்படி, கலப்பட டீசல் தமிழகம் முழுக்க விற்பனை செய்துவருவதாக அவர்கள் சொன்னதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால், மோகன்ராஜைப் பிடித்தால், கலப்பட டீசல் விற்பனையில் ஈடுப்பட்டுவரும் மொத்த நெட்வொர்க்கையும் வளைக்க முடியும் என்று போலீஸார், மோகன்ராஜைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ஈமு கோழி மோசடி: 10 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அடுத்த கட்டுரைக்கு