Published:Updated:

தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?
பிரீமியம் ஸ்டோரி
தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

சமூக ஆர்வலருக்கு நேர்ந்த பரிதாபம்!

தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

சமூக ஆர்வலருக்கு நேர்ந்த பரிதாபம்!

Published:Updated:
தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?
பிரீமியம் ஸ்டோரி
தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

வாரக் கணக்கில் துப்பாக்கியுடன் சென்னைக்குள் சுற்றிவந்து, வேவு பார்த்து, வட இந்திய நகைக்கடை அதிபரை சுட்டுக் கொன்ற கூலிப்படையினர் ஏற்படுத்திய பதற்றம் அடங்குவதற்குள், கடந்த 7-ம் தேதி தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) ஆர்வலரான பாரஸ்மல் கொல்லப்பட்டிருக்கிறார்.

பாரஸ்மல் கொலை எப்படி நடந்தது என்று  முதலில் போலீஸ் தரப்பில் பேசியபோது, “சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த கடையின் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்துள்ளது. ஆனால், அது தெளிவாக இல்லை. கொலை செய்யப்பட்ட பாரஸ்மல் ஆர்.டி.ஐ-யில் கேட்டு வாங்கிய தகவல்களால் பலர் அச்சமடைந்து உள்ளனர். அவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

பாரஸ்மல் உறவினரிடம் பேசினோம். ‘‘சமூக ஆர்வலர் பாரஸ்மல் கடை வைத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவருக்குச் சொந்தமாக ஓர் இடம் வைத்திருந்தார். அது, ஒன் ப்ளஸ் ஒன் கட்டடம். அதில், விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறி, மாநகராட்சி 2014 ஜூலை 26-ல் சீல் வைத்தது. ஆனால், அதற்குப் பக்கத்திலேயே ஐந்து மற்றும் ஆறு, ஏழு அடுக்குமாடிக் கட்டடங்களை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்தது. ‘இது மட்டும் எப்படி சாத்தியம்?’ என்று பாரஸ்மல் ஆர்.டி.ஐ-யில் விளக்கம் கேட்டார். இதனால் சிலர் அவரை செல்போனில் கூப்பிட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவரைப் பின்தொடர்ந்து விரட்டியும் சென்றுள்ளனர். அவர்கள்தான் கொலை செய்திருப்பார்களா எனத் தெரியவில்லை’’ என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், சட்டப் பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப் பாளருமான சிவ.இளங்கோ, “அவருடையது ஒன் ப்ளஸ் ஒன் கட்டடம்தான். அதற்கு அனுமதியில்லை என மறுத்துவிட்டார்கள் மாநகராட்சி அதிகாரிகள். ஆனால், ஒன் ப்ளஸ் சிக்ஸ் என்ற அளவில் ஒரு கட்டடம் கட்ட இதே மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதை எதிர்த்து நாங்கள் கடந்த 6 மாதங்களாகக் கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆர்.டி.ஐ-யில் நீங்கள் எந்தத் தகவலைக் கேட்டு மனுக் கொடுத்தாலும் அது சம்பந்தப்பட்டவருக்கு ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த வேலையையே பார்க்கிறார்கள். ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் உயிருக்கு இதனால் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. போலீஸார் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் புகார்களை வாங்கினாலே, பிரச்னைகள் தீரும்” என்றார்.

தகவல் கேட்டால் தலையை எடுப்பதா?

பாரஸ்மல் படுகொலைக்கு தி.மு.க பொருளாளர், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனத்தில், “கட்டட விதிமுறைகள் பற்றி போராடி வந்த இந்தத் தகவல் உரிமை ஆர்வலரின் கொலை தகவல் உரிமை சட்டத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்கிறது. தமிழகக் கூலிப்படையினரைக் கண்காணிக்க டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி தலைமையில் தனியாக ஒரு பிரிவே காவல் துறையில் இயங்குகிறது. ஆனாலும் கூலிப்படையினரின் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலை குறித்தோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுத்திருப்பதுபோல தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

பி.ஜே.பி-யின் தமிழிசை சவுந்தரராஜனும் இதேபோன்ற ஒரு காட்டமான அறிக்கையை இரண்டு நாட்களுக்கு முன் விடுத்திருந்தார்.

சென்னையில் மழை வெள்ளத்தோடு ரத்த வெள்ளமும் கலந்து ஓடுகிறது. போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதில் தலையிட வேண்டும்!

- ந.பா.சேதுராமன்