‘சென்னை முகவரியில் ஆதார், ரேஷன் கார்டு!’ - கொள்ளைக்கு முன்கூட்டியே திட்டமிட்டது அம்பலம்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை கடந்த வெள்ளிக்கிழமை வார விடுமுறைக்காக மூடப்பட்டது. இரு நாள்கள் விடுமுறைக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

அப்போது, வங்கியின் லாக்கரை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. போலீஸார் சோதனை நடத்தியதில், காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் மற்றும் அவரின் மகன் தில்லு ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.  

இதற்கிடையே, கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபிலால், அவரின் மகன் தில்லுவுக்கு சென்னை முகவரியில் ரேஷன் கார்டு வாங்கியுள்ளார். ரேஷன் மற்றும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வங்கியில் கணக்கு தொடங்கியதாகப் போலீஸார் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளையில் இருவரும் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபிலால் மற்றும் அவரின் மகன் தில்லுவை தேடி 5 தனிப்படை போலீஸார் நேபாளம் விரைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!