Published:Updated:

புரட்சித் தலைவியும் புரட்சிக் கலைஞரும்!

மதுரை ஆதீனத்தின் ஜோசியப் பேட்டி!

புரட்சித் தலைவியும் புரட்சிக் கலைஞரும்!

மதுரை ஆதீனத்தின் ஜோசியப் பேட்டி!

Published:Updated:
##~##

''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் அசுர வெற்றி குறித்து சில கருத்துகளைச் சொல்ல நினைக்கிறேன்; வர முடியுமா?'' - மதுரை ஆதீனம் நம்மை அழைத்தார்! 

''உள்ளாட்சித் தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராலேயே சாதிக்க முடியாத வெற்றியை, புரட்சித் தலைவி அம்மா சாதித்திருக்கிறார்கள். இப்படி ஓர் இமாலய வெற்றி பெற்றிருப்பது வரலாற் றில் இதுவே முதல் முறை! சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆளும் கட்சியினரால் அரசு அதிகாரிகளோ, காவல் துறையினரோ மிரட்டப்படுவது இல்லை. அவர்கள் அச்சமின்றி தங்களது கடமையைச் செய்து வருகிறார்கள். கடந்த ஆட்சி யில் தி.மு.க-வினரால் அப்பாவிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த வர்களும் கந்துவட்டி ரவுடி களும் இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைக்குள் போயிருப்பதால் மக்கள் நிம்மதியாக வாழ்வதை நாங்கள் பார்க்கிறோம். தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு மூலம் தமிழக மக்கள் உரிய 'எண்டார்ஸ்மென்ட்’ வழங்கி இருக்கிறார்கள்...'' என்று பீடிகை போட்ட மதுரை ஆதீனத்தின் முன் சில கேள்விகளை முன்வைத்தோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரட்சித் தலைவியும் புரட்சிக் கலைஞரும்!

''அப்படியானால் கடந்த ஆட்சியில் அத்துமீறல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் அளவுக்கு மீறி நடந்ததாகச் சொல்கிறீர்களா?''

''ஒன்றுமே தெரியாதது போல் கேட்காதீர்கள். கடந்த ஆட்சியில் எத்தனை அதிகார மையங்கள் இருந்தன! குடும்ப ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு சட்டம் போட்டார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துச் சேர்ப் பதிலேயே குறியாக இருந்தவர்கள், எங்களைப் போன்றவர்களைக்கூட உதாசீனப்படுத்தினார்கள். கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு உதாசீனப்படுத்தினார்கள். இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள். ஆனால், புரட்சித் தலைவி, உண்மையாக உழைப்பவர் களைத் தேடிக் கண்டுபிடித்து உரிய இடத்தில் உட்காரவைக்கிறாரே!''

''வார்த்தைக்கு வார்த்தை 'புரட்சித் தலைவி’ என்று முழங்குவதைப் பார்த்தால், ஆதீனத்துக்கு தொலைநோக்குத் திட்டம் ஏதோ இருப்பது போல் தெரிகிறதே?''

''அம்மையார் அவர்கள் உண்மையிலேயே புரட்சித் தலைவியாக இருப்பதாலேயே அப்படி அழைக்கிறோம். அதற்காக, ஆதீனம் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டதாகவோ, சேரப்போவதாகவோ கற்பனை பண்ணக் கூடாது. நல்லது எங்கு எப்போது நடந்தாலும் நாங்கள் அதை மனம் திறந்து பாராட்டத் தவறியது இல்லை. அந்த வகையில்தான் ஜெயலலிதாவைப் 'புரட்சித் தலைவி’ என்று பாராட்டுகிறோம். இதைச் சொல்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. அதற்காக நாங்கள் வெட்கப்படவும் இல்லை. இதைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அதற்காக நாங்கள் கவலைப்படப்போவதும் இல்லை.''

''விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்?''

''விஜயகாந்த் நல்ல மனிதர். தி.மு.க. அரசாங்கத்தின் நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு கட்சியை வளர்த்த அவர், காலச் சூழ்நிலையால் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியைவிட்டு விலகி

புரட்சித் தலைவியும் புரட்சிக் கலைஞரும்!

விட்டார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் புரட்சித் தலைவியின் கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள். இதைவைத்து விஜயகாந்த்துக்கு செல்வாக்கு இல்லை என நாம் முடிவுக்கு வர முடியாது. புரட்சித் தலைவி கட்சியும் புரட்சிக் கலைஞர் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தால், தமிழகத்தில் இனி வேறு எந்தக் கொம்பனும் ஆட்சிக்கு வர முடியாது என்பது எங்களின் அழுத்தமான கருத்து. எனவே, கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தில் இவ்விரு கட்சிகளும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதே ஆதீனத்தின் விருப்பம்.''

''தி.மு.க-வின் எதிர்காலம்..?''

''ஆதீனம் ஒன்றும் அஸ்ட்ராலஜர் அல்ல. ஆனால், ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். யாராக இருந்தாலும் பதவிகளும் பட்டங்களும் வரும்போது, பணிவாக இருந்து, பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஆசை இருக்கலாம். ஆனால், பேராசை இருக்கக் கூடாது. தி.மு.க-வினர் கடந்த காலங்களில் பேராசைப்பட்டார்கள்; இப்போது பெரு நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும்போது அடக்கத்தோடு இருந்திருந்தால், அவர்களுக்கு இப்படியரு மோசமான நிலை வந்திருக்காது.''

''அதிகாரங்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க-வினரின் கையில் குவிவதால், கடந்த காலத் தவறுகள் போல இங்கும் தவறுகள் நடக்காது என்பது என்ன நிச்சயம்?''

''மேயரோ, மந்திரியோ, வாரியமோ யார் தவறு செய்தாலும் தயவு தாட் சண்யம் பார்க்காமல் அம்மா தூக்கி எறிஞ்சிடுவாங்க என்ற பயம் அ.தி.மு.க-வினருக்கு எப்போதுமே உண்டு. இருந்தாலும் கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள் மீண்டும் தலை தூக்காமல் இருக்க புரட்சித் தலைவி அவர்கள், ஒரு கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.''

''விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல்லுங்கள்... ஜெயலலிதா உண்மையிலேயே மாறிவிட்டாரா?''

''அதில் என்ன சந்தேகம்? நல்லவர்களைப் போற்றி வாய்ப்புகளை வழங்கும் பண்பும் அனைவரையும் மதிக்கும் உயரிய குணத்தையும் புரட்சித் தலைவி யிடம் இப்போது நாங்கள் பார்க்கிறோம். அவர் இந்தியப் பிரதமராகும் காலம் வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்கான அனைத்து ஆற்றலும் சாணக்கியத்தனமும் புரட்சித் தலைவிக்கு இருக்கிறது!'' - பளீர் புன்னகையுடன் திருமஞ்சனத்துக்குப் புறப்பட்டார் ஆதீனம்!

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism