Published:Updated:

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

கடத்தப்பட்டவரை மீட்ட ஜூ.வி.!

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

கடத்தப்பட்டவரை மீட்ட ஜூ.வி.!

Published:Updated:
##~##

'கரூரில் வசிக்கும் 'கள் ஒற்றர்கள்’ இனத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரைக் கடத்திட்டுப் போய்

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 லட்சம் கேட்டு மிரட்டுறாங்க. போலீஸுக்குப் போனா புகாரை எடுக்க மாட்டேங்கிறாங்க... ஜூ.வி-தான் மீட்டுத் தரணும்!'' - குரல் உடைந்த நிலையில் நமக்கு இப்படி ஒரு வேண்டுகோள் போனில் வந்தது. 

தேடுதலில் இறங்கினோம்!

அலைகுடி மக்கள் இயக்கத்தின் தலைவர் செல்வத்திடம் பேசினோம். ''கடந்த 12-ம் தேதி மாலை சரவணனை நாலு பேர் ஒரு டாடா சுமோவில் கடத் திட்டுப்போய், எங்கோ காட்டுப் பகுதியில் வெச்சிருக்காங்க. அவர் மனைவி அந்தோணியம்மாளுக்கு போன் பண்ணி, '10 லட்சம் கொடுக்க லைன்னா, உன் புருஷனைக் கொன்னுரு வோம்’னு மிரட்டினாங்க. அந்தோணியம்மாள் கண்ணீரும்

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

கம்பலையுமா 16-ம் தேதி எங்ககிட்ட வந்து அழுதாங்க. உடனே கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கப் போனோம். ஆனா, போலீஸ்காரங்க புகாரை எடுக்க மறுத்துட்டாங்க. 'நாளைக்குள்ள பணம் கொடுக்கலைன்னா... அவரைக் கொன்னுடுவோம்’னு சொல்லி இருக்காங்க. இதுதான் கடத்தினவங்க பேசின செல்போன் நம்பர்...'' என்று சொல்லி ஓர் எண்ணை நம்மிடம் கொடுத்தார் செல்வம்.

அந்த எண்ணுக்கு நாம் போன் செய்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். ''சரவணனை ஏன் கடத்தினீங்க?'' என்று கேட்டோம். அதற்கு, ''எனக்கு இந்த 'சிம்’ அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் தெருவில் கிடைச்சது. எனக்கும் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கன்னா பின்னான்னு பேசாதீங்க...'' என்று எதிர் முனையில் பேசியவர் பதில் சொன்னார். உடனே நாம், ''நீங்க எங்கே இருந்து பேசுறீங்கனு டிரேஸ் பண்ணிட்டோம்...'' என்றதும்... அடுத்த விநாடி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில், சரவணன் தன் மனைவிக்கு போன் செய்து, 'என்னை விட்டுடறேன்னு சொல்லிட்டாங்க’ என்று சொல்லி இருக்கிறார். கடத்தல்காரர்களிடம் திடீர் மனமாற்றம்.

கரூர் எஸ்.பி-யான நாகராஜனிடம் இவை அனைத்தையும் சொல்ல... அந்தோணியம்மாள் கொடுத்த புகாரை வாங்கிக்கொண்டார். கடத்தியவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை டிரேஸ் செய்து, அவர்கள் மதுரை அருகில் உசிலம்பட்டியில் இருக்கிறார்கள் என்று உறுதி செய்தனர். உடனே

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

ஒரு போலீஸ் டீம் அங்கு சென்று அன்று இரவே சரவணனை பத்திரமாக மீட்டனர். 10 நாட்களாக அடி வாங்கிக் காயம்பட்டு, பட்டினியாகக்கிடந்த சரவணனை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சரவணனிடம் பேசினோம். ''சார்... அன்னிக்கு கோழி வாங்கிட்டு, ரோட்டை கிராஸ் செய்தேன். திடீரென டாடா சுமோவுல வந்தவங்க என் வாய், கண்ணைப் பொத்தி, வண்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க. இந்த 10 நாட்களா மதுரை, சென்னை, புதுச்சேரினு

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

கூட்டிட்டுப் போனாங்க. ஒவ்வொரு ஊரிலும் பாழடைஞ்ச இருட்டு அறையில் கை, காலைக் கட்டிவெச்சுட்டாங்க. என் மனைவி பணம் இல்லைனு சொல்லச் சொல்ல... உதைச்சாங்க. கத்தியால் கீறினாங்க. பைப்பால அடிச்சாங்க. காயம்பட்ட இடத்தில் உப்பு, மிளகாய்த் தூளைத் தேச்சு சித்ரவதை செஞ்சாங்க...'' என்று கண்ணீர்விட்டவர்,

''கத்தியால கீறி... உப்பு, மிளகாய் பொடி போட்டாங்க!''

''என்னை விடுதலை செஞ்ச கடைசி நாளில், யாரோ பத்திரிகைகாரங்க போன் பண்ணிப் பேசினாங்களாம். அதுல பயந்துட்டாங்க. பிறகு என் கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்டுட்டுப் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. அவங்க மதுரை பாஷையிலதான் பேசுனாங்க...'' என்றார்.

சரவணனின் வழக்கறிஞர் பெரியார்தாசன், ''இந்த மக்களுக்கான பிரச்னை பல காலமாகத் தொடர்கிறது. ஆரம்பத்தில் புறம்போக்கு இடத்தில் டென்ட் போட்டு வாழ்ந்தவர்கள், இப்போது கௌரவமாக வீடு எடுத்துத் தங்கி, குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்கள். அவர்களது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர்தான், கடத்திச் சென்று பணம் பறித்து வருகிறார்கள். புகார் கொடுக்கச் செல்லும் இவர்களையே குற்றவாளிகளாகப் பார்க்கும் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!'' என்றார்.

கரூர் எஸ்.பி-யான நாகராஜனிடம் பேசினோம். ''10 நாட்களாக உடல்ரீதியாக, மனரீதியாக சித்ரவதைகளை அனுபவித்த சரவணன் பலவீனமாக இருக்கிறார். அவரை மீட்டது போல், உரிய விசாரணை நடத்தி, விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம். இம்மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உரிய மரியாதை தரப்படும்!'' என்றார்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், போலீஸார் சீக்கிரம் கண்டுபிடிக்கட்டும்!

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism