Published:Updated:

ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?
பிரீமியம் ஸ்டோரி
ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

பூ வியாபாரிகளிடம் ஒரு கோடி சுருட்டல்!

ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

பூ வியாபாரிகளிடம் ஒரு கோடி சுருட்டல்!

Published:Updated:
ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?
பிரீமியம் ஸ்டோரி
ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?
ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

சூரில் பூ வியாபாரிகளிடம், தன்னுடைய நிலத்தை விற்பதாகச் சொல்லி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அவர்களை ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், தமிழகக் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி.

“ஓசூர் பஸ் நிலையத்துக்கு எதிர்புறம் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்குச் சொந்தமான 11 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை விற்பதாகச் சொல்லி, தேர்தலுக்கு முன்பாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பூ வியாபாரிகளிடம் இருந்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அ.தி.மு.க-வின் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரான சந்திரசேகர் மூலமாக வாங்கினார். அமைச்சர் இப்போது, ‘நான் பணமே வாங்கவில்லை’ என்று சொல்லி சந்திரசேகரை மாட்டிவிடப் பார்க்கிறார். அதில் பிரச்னை வந்ததால், அமைச்சர் பதவியில் இருக்கும் கோதாவில் சந்திரசேகரை அமைச்சர் மிகவும் இழிவாகப் பேசிவிட்டார். இதனால் மனம் நொந்துபோன சந்திரசேகர் ஒரு வாரம் தலைமறைவாகிவிட்டார்” என்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

என்ன பிரச்னை என்பதை அறிவதற்காக சந்திரசேகரின் சொந்த ஊரான ஓசூரை அடுத்த பாரந்தூருக்குச் சென்றோம். சந்திரசேகருக்கு உடல் நலக்குறைவால் ஓசூரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகச் சொன்னார்கள். சந்திரசேகருக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. கம்மியக் குரலில் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“2005-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். கட்சிக்காக நிறைய உழைத்துள்ளேன். இப்போது என்னென்னவோ நடந்துவிட்டது” என்று பேச்சை நிறுத்தியவர், “சரி... எதையும் கிளற வேண்டாம், விடுங்கள். நான் ஏதாவது சொல்லி, அது அம்மா கவனத்துக்குப் போனால் அவருக்குப் பிரச்னையாகிவிடும். என்னால் அவருக்கு எந்தப் பிரச்னையும் வரவேண்டாம். அவர் நல்லா இருக்கட்டும். அவரை காலி பண்ணணும்னு நினைச்சிருந்தா என்னோட லெட்டர்பேடுல அம்மாவுக்கு ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு செத்துப் போயிருப்பேன். எதுவும் வேணாம் விட்டுடுங்க ப்ளீஸ்...” என்று நிறுத்திக்கொண்டார்.

“அமைச்சர் அந்த இடத்தை விற்பதாகச் சொல்லவே இல்லை. தற்காலிகமாக அந்த இடத்தில் பூ வியாபாரிகள் கடை வைத்துக்கொள்ளட்டும் என்று அமைச்சரிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தைச் சொந்தமாக வாங்கித் தருவதாகப் பூ வியாபாரிகளிடம் பொய் சொல்லிக் கோடிக்கணக்கில் சந்திரசேகர் பணம் வசூலித்து உள்ளார். இப்போது பதில் சொல்ல முடியாமல் தலைமறைவாகி நாடகமாடுகிறார்” என்கிறது அமைச்சர் தரப்பு.

பூ வியாபாரிகளிடம் பேசினோம். “முதல்ல, முனிசிபாலிட்டி இடத்துல கடை போட்டுக்க ஏற்பாடு பண்றோம்னுதான் பணம் கேட்டாங்க. உடனே, 79 லட்சம் ரூபாய் வசூலிச்சுக் கொடுத்தோம். அவுங்க காட்டுன இடம் ரொம்பத் தொலைவுல இருந்துச்சி. வியாபாரத்துக்கு ஒத்து வராதுனு சொன்னோம். அப்புறமாத்தான் அமைச்சர் இடத்தை விலைக்கு வாங்கிக்கோங்கனு சொன்னாங்க. இங்க 32 கடைகள் இருக்கு. இதுவரை 1 கோடி 60 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கோம். 79 லட்சம் ரூபாயை கட்சி ஆபீஸ்ல வச்சு அமைச்சர்கிட்ட கொடுத்தோம். ஒவ்வொரு முறை பணம் கொடுத்தபோதும் சந்திரசேகரோடு நாங்களும் போயிருக்கோம். அமைச்சர் பேசுன ஆடியோ ரெக்கார்டுகூட எங்கக்கிட்ட இருக்கு. எல்லாரும் வட்டிக்கு வாங்கிப் பணம் கொடுத்தி ருக்கோம். நாங்களும் கட்சிக்காரங்கத்தான். அதனாலதான், நம்பிக் கொடுத்தோம். எங்களை ஏமாத்துனா, 50 குடும்பமும் சாவதைத் தவிர, வேற வழி இல்லை” என்று கதறினார்கள்.

ஏமாற்றியது அமைச்சரா... கவுன்சிலரா?

இது தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியைத் தொடர்புகொண்டோம். “இடத்துக்காகப் பணம் வாங்கவே இல்லை. பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்தார்கள். அவர்கள் மீது பாவப்பட்டு, சும்மா வச்சுக்கோங்க என்று சொன்னேன். அதைப் பயன்படுத்திகிட்டு இப்படிச் செய்கிறார்கள். அந்த இடம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு இருக்கிறது. அது முடியும் வரை எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

அமைச்சர், ஊராட்சிக் குழு உறுப்பினர்... இவர்களில் நாடகம் ஆடுவது யார் என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பூ வியாபாரிகளுக்கு முதல்வர்தான் நியாயம் வழங்க வேண்டும்.

- எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: எம்.விஜயகுமார்