Published:Updated:

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

Published:Updated:
சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...
சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

காதலை நிராகரித்ததுதான் காரணமா?

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும்கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். போலீஸுக்கு பெரும் சவாலாக மாறிய இந்த வழக்கில், கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் போலீஸார் கைதுசெய்தனர். 

காதலால் அரியர்ஸ்!

ராம்குமார் குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் விசாரித்தோம். “ராம்குமாரின் தந்தை பரமசிவன், தென்காசி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியர். ராம்குமார், ப்ளஸ் 2 முடித்துவிட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ மெக்கானிக் படித்தார். படித்தபோது கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவியை ராம்குமார் ஒருதலையாகக் காதலித்துள்ளார். அதனால் படிப்பில் கோட்டை விட்டார். சில வருடங்களுக்கு முன்பு ஊரில் ஒரு பெண்ணுக்கும் ராம்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, ஊர் பஞ்சாயத்துவரை போனது. பொறியியல் படிப்பில் பல பாடங்களில் அரியர்ஸ் இருந்ததால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு வருடத்துக்கு முன்பு சென்னை சென்ற ராம்குமார், அங்கு ஐவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்” என்கிறார்கள் மீனாட்சிபுர மக்கள்.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

ஐ.பி.எஸ். ஆசை!

வங்கியில் கல்விக்கடன் பெற்று இன்ஜினீயரிங் படித்த ராம்குமாருக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. அவர் படித்த பொறியியல் கல்லூரி பயோடேட்டாவில், தன்னுடைய லட்சியம் ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பதுதான் என்று ராம்குமார் குறிப்பிட்டு உள்ளார். 

“ராம்குமாருக்கு அமைதியான குணம். யாரிடமும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார். அவர் கொலை செய்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் வேலைக்குச் சென்று இரண்டு தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைத்துக் குடும்பத்தையும் நல்ல நிலைக்குக் கொண்டு வருவார் என்று நாங்கள் எல்லாம் கனவுகண்டோம். அந்தக் கனவு தகர்ந்துவிட்டது. ஆனால், அவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது” என்றார், ராம்குமாரின் உறவினர் அப்துல்லா.

பழக்கம் ஏற்பட்டது எப்படி?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

சூளைமேடு தெற்கு கங்கையம்மன் தெருவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சுவாதியின் வீடு உள்ளது. சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், இ.எஸ்.ஐ-யில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சுவாதியின் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இரண்டு கி.மீ தூரத்தில் உள்ளது.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

“ராம்குமார் தங்கி இருந்த மேன்ஷன் வழியாகத்தான் ரயில் நிலையத்துக்கு சுவாதி செல்வார். அப்போது சுவாதியை ராம்குமார் தினமும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அனைவரிடமும் சகஜமாகப் பழகும் குணமுடைய சுவாதியிடம் ராம்குமார் பேசியுள்ளார். இந்தப் பேச்சு தொடர்ந்துள்ளது. ஒருநாள், சுவாதியிடம் ராம்குமார் காதலை வெளிப்படுத்த, கடுமையான வார்த்தைகளால் சுவாதி திட்டியிருக்கிறார். அந்தக் கோபத்தில் சுவாதியின் வாயில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வெட்டியிருக்கிறார். அது கொலையில் முடிந்திருக்கிறது’’ என்று போலீஸ் தரப்புச் சொன்னது.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

செல்ஃபி ரகசியம்!

2012-ல் ராம்குமார் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘அழகான உருவத்தைவிட அழகான நடத்தையே மிக நல்லது’ என்று ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். ராம்குமாருக்கும், சுவாதிக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸுக்கு உள்ளது. அந்த நட்பு மூலம் சென்னைக்கு வந்த ராம்குமாருடன் சுவாதி பழகியிருக்கலாம் என்றும், பிறகு ராம்குமாரைப் பிடிக்காமல் போயிருக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன. சுவாதியும் ராம்குமாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி படம் ஒன்று உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாக்கெட்டில் பிளேடுடன்...

ராம்குமாரைப் பிடிக்க ‘ஆபரேஷன் ராம்’ என்று பெயரிட்டு, ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தவர் நெல்லை டி.ஜ.ஜி தினகரன். மாவட்ட எஸ்.பி விக்ரமன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ சகாயசெல்வின் ஆகியோரைக் கொண்ட டீம் உருவாக்கப்பட்டது.

சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்...

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கிராமத்தின் மின்சாரத்தைத் துண்டித்தோம். கும்மிருட்டு நிலவியது. செல்போன் லைட் வெளிச்சத்தில் வீட்டை முற்றுகையிட்டோம்.  அவர்கள் வீட்டு நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது. போலீஸ்... போலீஸ் என்று ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டதும், ராம்குமார் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஓடிவிட்டார். போலீஸிடம் சிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற ஐடியாவில் சட்டைப் பாக்கெட்டில் எப்போதும் பிளேடுடன் வலம் வந்திருக்கிறார் ராம்குமார். போலீஸைப் பார்த்ததும் கழுத்தை அறுத்துக்கொண்டார். மீண்டும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்ள முயல... லாகவமாக அவர் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டனர். இதெல்லாமே வீடியோவில் பதிவுசெய்துள்ளோம். அவரது குடும்பத்தினர் முன்னிலையில்தான் எல்லாமே நடந்தது. உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றோம். சுவாதியின் செல்போனை அவரது அறையிலிருந்து கைப்பற்றினோம். அது ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. சென்னை மேன்ஷனுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீதுகளைக் கைப்பற்றினோம். இந்த வீட்டில் இருந்த அரிவாளைத்தான் ராம்குமார் சென்னைக்கு எடுத்துப்போயிருக்கிறார்’’ என்றார்.

மீண்டும் கைது!

ராம்குமார் மீது தற்கொலை செய்ய முயன்றதாக ஐ.பி.சி 309 கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. தற்போது சென்னை போலீஸ் அவரை கைது செய்திருக்கிறது. அவர்கள் விசாரணை முடிந்ததும், தென்காசி அழைத்துவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் போகிறார்கள். தற்கொலை முயற்சி வழக்கிலும் துரிதமாகச் செயல்பட்டு ராம்குமாருக்கு  3 முதல் 7 வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறது நெல்லை போலீஸ்.
 

- கனிஷ்கா, பி.ஆண்டனிராஜ், எஸ்.சரவணப்பெருமாள், எஸ்.மகேஷ், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், மீ.நிவேதன்