Published:Updated:

நாங்க கொன்னுட்டு, அவங்க குடும்பத்துக்கு நிதி கொடுக்குறோம்..

பரமக்குடியில் ஆவேச காயத்ரி

நாங்க கொன்னுட்டு, அவங்க குடும்பத்துக்கு நிதி கொடுக்குறோம்..

பரமக்குடியில் ஆவேச காயத்ரி

Published:Updated:
##~##

ரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்காக அரசு அமைத்த நீதிபதி சம்பத் கமிஷனின் விசாரணையை, பாதிக்கப்பட்ட ஒரு சில கிராம மக்கள் புறக்கணித்துள்ளார்கள். இந்த நிலையில்... நியாயமான பொது விசாரணைக்கு 'பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு’  என்ற குழு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அடங்கிய இந்தக் குழுவை, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ஒருங்கிணைத்தது. 

கடந்த 22-ம் தேதி பரமக்குடியில் முன்னாள் நீதிபதி சுரேஷ் தலைமையிலான குழுவினர் பொது விசாரணையைத் தொடங்கினர். இதில் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் சாட்சியாக  சந்திரபோஸ் என்ப வர் பேசினார். ''பரமக்குடி துப்பாக்கிச் சூடு, ஓர் அரச பயங்கரவாதம். குற்றம் சாட்டப்பட்ட தமிழக அரசே, அதுபற்றி விசாரிப்பது நியாயமாக இருக்காது. எனவே, சம்பத் கமிஷன் விசாரிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உயர் நீதிமன்றக் கண்காணிப்பிலான சி.பி.ஐ. விசாரணைக்கு, இந்தப் பொது விசாரணைக் குழு சிபாரிசு செய்ய வேண் டும்!'' என்றார்.

நாங்க கொன்னுட்டு, அவங்க குடும்பத்துக்கு நிதி கொடுக்குறோம்..

'' பரமக்குடி சம்பவத்துக்குக் காரணம், அதற்குச் சில நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த பழனிக்குமார் என்ற மாணவனின் மரணம்தான்'' என்று அரசு தரப்பு சொல்லி வரும் நிலையில், அந்த பழனிக்குமாரின்  தந்தை பள்ளப்பச்சேரி தங்கவேலு இந்தக் குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.  ''மாற்று சாதிக்காரர்கள் மத்தியில் எங்க புள்ளைங்க படிக்கிறதே கஷ்டமான காரியம்.

நாங்க கொன்னுட்டு, அவங்க குடும்பத்துக்கு நிதி கொடுக்குறோம்..

அதனால்தான், அடுத்த ஊரு பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சோம். ஒண்ணா சேர்ந்துப் படிக்கிறதுக்கே பயப்படுறவன் என் மகன். அப்படிப்பட்டவனை, அடுத்த சாதியைத் திட்டி எழுதினான்னு சொல்லிக் கொன்னுட்டாங்க.  எம்மகன் எப்படிய்யா அவங்களைப்பத்தி இழிவா எழுதுவான்? யாரையோ பயமுறுத்துறதுக்காக ஏதும் தெரியாத என் புள்ளையை அநியாயமா வெட்டிக் கொன்னுட்டாங்க. என் மகனைக் கொன்ன ஆறு பேர்ல ஒருத்தரை இன்னும் போலீஸ் பிடிக்கலை. அவரையும் வழக்கில் சேர்த்து, ஆறு பேருக்கும் தண்டனை கொடுக்கணும்...'' என்றார்.

போலீஸ் தாக்குதலில் வலது காலில் எலும்பு முறிந்த ராஜ்குமார், நடக்க முடியாமல் இருவரின் உதவியோடு வந்தார். 'ஒரு சந்துக்குள் நடந்து வந்த என்னை பத்துப் பதினஞ்சு போலீஸ்காரங்க சேர்ந்து அடிச்சாங்க. அஞ்சு முக்கு ரோட்ல தூக்கிட்டு வந்து போட்டுத் துவைச்சாங்க. ஒரு போலீஸ்காரர் ஷூவால என் உயிர் ஸ்தானத்தில் மிதிச்சார். நான் மயக்க மாயிட்டேன். 15 நாள் சிறுநீர் வராம டியூப் போட்டுத்தான் எடுத்தாங்க. இப்பவும் நடக்க முடியலை, வலி பின்னியெடுக்குது!'' என்றார் கண்ணீருடன்.

50-க்கும் மேற்பட்டோர் சாட்சியங்கள் அளித்த  பொது விசாரணையில், அனைவரின் மனங்களையும் பிழிந்தது, காயத்ரி என்ற இளம் விதவையின் சாட்சியம்தான். பச்சிளம் குழந்தையுடன் வந்து பேசத் துவங்கியவர், ''நானும் என் கணவர் ஜெயபாலும் வேற சாதி. காதலிச்சுத் திருமணம் செஞ்சுகிட்டோம்.

நாங்க கொன்னுட்டு, அவங்க குடும்பத்துக்கு நிதி கொடுக்குறோம்..

நிறைமாதக் கர்ப்பிணியா இருந்த எனக்கு செப்டம்பர் 4-ம் தேதி வளைகாப்பு நடந்தது. அதுக்குப் பிறகு பரமக்குடியில் உள்ள என் தாய் வீட்டில் இருந்தேன். இம்மானுவல் சேகரன் குருபூஜை அன்னிக்கு என்னைப் பார்க்க வந்தவர், 'வெளியில போயிட்டு வர்றேன்’னு போனார். ஆனா திரும்பப் பிணமாத்தான் அவரைப் பாக்க முடிஞ்சது. குழந்தையை நல்லாப் படிக்கவைக்கணும், பேர் சொல்ற மாதிரி வளர்க்கணும்னு அடிக்கடி சொல்வார்... ஆனா, அந்தக் குழந்தை முகத்தைக்கூட பார்க்கவிடாம, அநியாயமா அவரைக் கொன்னுட்டாங்க. என் கணவர் உயிருக்கு ஒரு லட்சம்னு மதிப்பு போட்டிருக்கு இந்த அரசாங்கம். ஒண்ணுக்கு அஞ்சா தர்றேன். என் கணவர் உயிர் திரும்ப வேணும். என் குழந்தைக்கு அப்பா வேணும். தருவாங்களா? என் கணவரைக் கொன்னவங்களை இங்க நிறுத்துங்க. அவங்களை நாங்க கொன்னுட்டு அவங்க குடும்பத்துக்கு ஒரு லட்சம் கொடுக்குறோம். அப்பப் புரியும், எங்களோட வேதனை!

என் கணவர் சாவுக்குக் காரணமானவர்களுக்கு சரியான தண்டனையை நீங்க வாங்கித் தரணும். அந்த நம்பிக்கையிலதான் பொறந்து 24 நாளே ஆன இந்தப் பச்ச மண்ணோட உங்க முன்னாடி நிக்கிறேன்!'' என்றவர் மீண்டும் கதறி அழ... அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்தது.

பொது விசாரணைக் குழுவில் வந்திருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகுவிடம் பேசினோம்.

''பரமக்குடி சம்பவம்பற்றி சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போட்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க, ஆதிக்க சக்திகளும் அரசும் சேர்ந்து நடத்திய சதி இது. விரிவான விசாரணை அறிக்கையை முதலில் மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். தொடர்ந்து தமிழக அரசிடமும், அவர்கள் அமைத்துள்ள விசாரணைக் குழுவிடமும் எங்கள் பரிந்துரைகளை முன்வைப்போம். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்!'' என்றார்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism