Published:Updated:

போட்டோ எடுக்குறாங்க... போலி செக் குடுக்குறாங்க!

ஆக்ஷனில் ராதாரவி

போட்டோ எடுக்குறாங்க... போலி செக் குடுக்குறாங்க!

ஆக்ஷனில் ராதாரவி

Published:Updated:
போட்டோ எடுக்குறாங்க... போலி செக் குடுக்குறாங்க!

'என் பெயரையோ அல்லது சொத்தையோ காரணம் காட்டி, அதை என் உறவினர் களோ நண்பர்களோ எதற்காவது பயன் படுத்தினால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்...’ என்று தீபாவளி அன்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார், ராதாரவி.

என்ன விஷயமாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் நடிகர் சங்கச் செயலாளரா இருக்கேன். அதனால், நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போறேன். விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறேன். நாகரிகம் கருதி அந்தச் சபையில் எல்லாம் சிரிக்கிறேன், அவங்ககிட்ட அன்பாப் பேசறேன். அந்த மாதிரி நேரத்தில், சிலர் ஆர்வமா அதை போட்டோவா எடுத்துக்கிறாங்க.  எனக்கு அதிகப் பழக்கமே இல்லாத அந்த மாதிரி ஆட்கள்தான், 'எனக்கு ராதாரவி நல்ல பழக்கம்’னு சொல்லிக்கிட்டு, ஒரு சில ஃபைனான்ஸியர்களிடம் பணம் வாங்கிடுறாங்க. பணம் தந்தவங்க எனக்கு போன் செய்து, 'உங்களோட ஃப்ரெண்ட்னு சொன்னார். அதான் சார் பணம் கொடுத்தேன்’கிறாங்க. 'ஏம்பா, இப்போ போன் செய்ற நீங்க, பணம் கொடுக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு போன் பண்ணி விசாரிச்சு இருக்கலாமே..?’னு ஆதங்கப்படுறதைத் தவிர, நான் அதுக்காக என்ன பண்ண முடியும்? தொடர்ந்து இதுபோல சில சம்பவங்கள் நடக்கவே... மனசுக்கு உறுத்தலாகித்தான் என் வக்கீலிடம் என்ன செய்யலாம்னு கேட்டேன். அவர்தான் இங்கிலீஷ்-தமிழ் தினசரிகளில் விளம்பரம் கொடுக்கச் சொன்னார். நான் இப்ப ஆளும் கட்சியில் தலைமைக் கழகப் பேச்சாளரா இருக்கேன். தமிழ்நாட்ல அம்மா அப்பழுக்கு இல்லாத ஒரு ஆட்சியை நடத்திட்டு வர்ற இந்தச் சூழல்ல, இதுமாதிரி ஆட்களால என்னோட பேருக்கும் கட்சிக்கும் இழுக்கு வரக் கூடாதுன்னு தெளிவுபடுத்தத்தான் இந்த அறிக்கை!'' என்று விளக்கினார் ராதாரவி.

- எம்.குணா

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism