Published:Updated:

“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”
பிரீமியம் ஸ்டோரி
“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

ராம்குமார் தந்தை எழுப்பும் கேள்விகள்!சந்தேகம்

“ராத்திரி 11 மணிக்கு மேல் போலீஸார் எங்க வீட்டுக் கதவைத் தட்டி, ‘இது முத்துக்குமார் வீடுதானே?’னு கேட்டாங்க. நான், ‘இங்கே முத்துக்குமார்னு யாரும் இல்ல. என் பையன் பேரு ராம்குமார்’னு சொன்னேன். உடனே அவங்க, ‘அவன் உங்க வீட்டுக்குப் பின்னால கழுத்தை அறுத்துக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கான் பாருங்க’னு சொன்னாங்க. நான் ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கே ராம்குமார் கழுத்தில் ரத்தம் உறைந்து மயக்கமாகிக் கிடந்தான். அதைப் பார்த்து நான் மயக்கம் ஆயிட்டேன்” என்று சோகத்துடன் சொன்னார் பரமசிவம். சென்னையில் இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தைதான் இவர்.

“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் பரமசிவத்தை சந்தித்தபோது நம்மிடம் பல விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ராம்குமார் அடிக்கடி ஊருக்கு வந்துட்டுப் போவான். அதுமாதிரித்தான், போன மாதம் 25-ம் தேதி வீட்டுக்கு வந்தான். ஊர்ல இருந்தா ஆடு மேய்க்கப் போவான். அப்படித்தான் இப்பவும் ஆடு மேய்க்கப் போனான். ராம்குமாரை கைதுசெய்த அன்னைக்கு சாயங்காலமே போலீஸ்காரங்க எங்க ஊருக்கு வந்திருக்காங்க. அதை ராம்குமாரும் பார்த்திருக்கான். ராத்திரி சாப்பிட்டப்போ, ‘என்னப்பா... நம்ம ஊருக்குள்ள போலீஸ் வந்திருக்கே... என்ன விஷயம்?’னு அப்பாவியாகக் கேட்டான். உண்மையிலேயே அவன் தப்புச் செஞ்சிருந்தா, போலீஸை பார்த்த உடனே எங்கேயாவது ஓடியிருப்பானே. அவன் ரொம்ப அமைதியான பையன். சின்ன வயசில இருந்தே யார்கிட்டயும் வம்புதும்புக்குப் போகமாட்டான். இந்த ஊரில் யார்கிட்ட வேணாலும் அவனைப் பத்தி கேட்டுப் பாருங்க. அவன் ஒரு கொலையைச் செஞ்சிருக்கான்னு சொல்றதை நாங்க மட்டுமில்ல, இந்த ஊரே நம்பலை. அதுதான் நிஜம்.

“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

சென்னையில எங்க ஊர் பசங்க சிலர் இருக்காங்க. அவங்ககூட சேர்ந்து அவனும் சென்னைக்குப் போனான். கவர்மென்ட் வேலையில சேரணும்னு அவனுக்கு ரொம்ப ஆர்வம். அதனால, போட்டித் தேர்வுகள் எழுதிக்கிட்டு இருந்தான். சென்னைக்கு போனா, தேர்வுகளுக்குப் படிக்க முடியும். அரியர்ஸ் பாடங்களைப் படிக்கலாம்னு சொன்னான். சென்னையில் அவன் எந்தக் கடையிலும் வேலை செய்யலை. அவனுக்கு மாதாமாதம் நான்தான் பணம் அனுப்பினேன். அந்தப் பெண்ணோட அவனுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்தப் பெண்ணின் கொலை தொடர்பாக பேப்பர்ல படிச்சப்போ நானும் ரொம்ப வருத்தப்பட்டேன். நானும் ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்களைப் பெத்தவன்தான். அந்த முறையில சொல்றேன்... சுவாதி கொலையில உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சு தண்டனை கொடுக்கணும்” என்றார் கண்ணீருடன்.

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், “சுவாதியை ராம்குமார் தினமும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதை சுவாதி கண்டித்ததுடன் ‘உன் மீது ஈவ்டீசிங் புகார் கொடுப்பேன்’ என மிரட்டியதால் கொலை செய்துவிட்டு செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்” என்றார். இன்னொரு போலீஸ் அதிகாரி, “அந்தக் கொலையை 15 வினாடிகளில் செய்து முடித்த குற்றவாளி 5 முதல் 7 வினாடிகள் அங்கேயே நிலைகுலைந்து நின்று, பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்” என்றார்.

“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

ராம்குமாரின் வழக்கறிஞரும் முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான ராம்ராஜ், ‘‘இந்த வழக்குக்கும் ராம்குமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அவரை நான் சந்தித்துப் பேசிய பிறகு தெரிய வருகிறது. அதனால், அவருக்கு ஜாமீன் கேட்கப்போவதில்லை. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ய உள்ளேன்’’ என்றார்.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்