Published:Updated:

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?
பிரீமியம் ஸ்டோரி
தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

மளிகைக் கடை நடத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதி!

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

மளிகைக் கடை நடத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதி!

Published:Updated:
தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?
பிரீமியம் ஸ்டோரி
தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

டந்த வாரம் 6-ம் தேதி. அதிகாலை நேரம். திருப்பூரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்த ஆண்டிப்பாளையம் கோழிப்பண்ணையில் குடோன்போல் இருந்த ஒரு பழைய கட்டடத்தை போலீஸார் முற்றுகையிட்டனர். மேற்கு வங்க போலீஸார், மத்தியப் புலனாய்வு போலீஸார், தமிழக காவல் துறை எனக் கூட்டாக இணைந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர். அங்குதான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஐ.எஸ் தீவிரவாதி என்று சொல்லப்படும் மோசா என்கிற முகமது மசிருதீனின் வீடும் இருந்தது.

அவரது வீடு, மளிகைக் கடையில்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் மோசா கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

மேற்கு வங்கம் டு தமிழகம்!

இதுதொடர்பாகத் திருப்பூரில் உள்ள புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “மேற்கு வங்கம், பிர்பாம் மாவட்டத்தில் லாப்பூர் பகுதியைச் சேர்ந்த மோசா எனப்படும் முகமது மசிருதீன், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். கல்லூரியில் படித்தபோதே சாயிரா பானு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைப் பெற்றோர் ஏற்காததால் 21 வயதில் மனைவி சாயிரா பானுவுடன் தமிழகம் வந்தார் மோசா. திருப்பூர் வந்த பிறகுதான் இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ‘ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்’ (ஜெ.எம்.பி.) எனும் தடை செய்யப்பட்ட வங்கதேச அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். பின்னர், ஜே.எம்.பி அமைப்பினர் பலர், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் மோசா.

பங்களாதேஷில் நடந்த பேராசிரியர் கொலை வழக்குத் தொடர்பாக கொல்கத்தாவில் ஐ.எஸ் அமைப்பைச் ேசர்ந்த ஒருவரைப் பிடித்து மேற்கு வங்க போலீஸ் விசாரணை நடத்தியது. அப்போது, மோசா என்பவரும் ஐ.எஸ் அமைப்பின் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்துத்தான் மோசாவை கண்காணிக்கத் தொடங்கியது மேற்கு வங்க காவல் துறை. ஐ.எஸ் அமைப்பின் இந்திய அளவிலான தலைவர்கள், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரிடம் தொடர்பு வைத்திருந்துள்ளனர்.  இந்த நிலையில்தான் கொல்கத்தா சென்றிருந்த மோசாவை புர்துவான் ரயில் நிலையத்தில்வைத்து அந்த மாநிலப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதன் பிறகுதான் திருப்பூரில் அவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவரது மனைவி சாயிரா பானு, அண்ணன் லினாசுருதீன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றனர்.

ஆறு ஆண்டுகளாக திருப்பூரில்...


கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில்தான் வசித்து வந்துள்ளார் மோசா. ஆனால், அவர் மீது எந்தச் சந்தேகமும் யாருக்கும் எழவில்லை. “இவரது மளிகைக் கடையில்தான் நாங்கள் காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கி வந்தோம். எங்கும் வெளியே போகமாட்டார். மளிகைக் கடைக்குத் தேவையான பொருட்கள் வாங்க மட்டும்தான் செல்வார். மிகவும் அமைதியாக இருந்து வந்தார். எப்போதாவது சொந்த ஊருக்குச் செல்வார். இவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை நம்பக்கூட முடியவில்லை” என அதிர்ச்சி தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
“மோசா, மாதம் ஒருமுறை மேற்கு வங்கம் சென்று வந்துள்ளார். வரும்போது வேலை தேடி வரும் இளைஞர்களையும் திருப்பூர் அழைத்து வந்துள்ளார். மோசாவின் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், அங்கிருந்து அதிநவீன லேப்டாப் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு பணம் அனுப்பவும் மோசா உதவி செய்து வந்துள்ளார். இதனால் ஐ.எஸ் அமைப்பினைச் சேர்ந்த மேலும் சிலர் திருப்பூரில் ஊடுருவி இருக்க வாய்ப்பு அதிகம்” என மேற்கு வங்க உளவுப்பிரிவு எச்சரிக்கிறது.

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

இது முதல்முறையல்ல!

திருப்பூரில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பது இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் நிர்வாகிகள் தலைமறைவாக இருக்கத் தேர்வு செய்யும் இடமாக திருப்பூர் இருந்து வருகிறது. தமிழக அளவில் முக்கியத் தீவிரவாதிகள் பலர் திருப்பூரில்தான் பதுங்கி இருந்திருக்கின்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு நக்சல் அமைப்பினர் சிலர், 2007-ம் ஆண்டு தமிழக நக்சல் இயக்கத் தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள், 2007-ல் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இரும்பு பால்ரஸ் குண்டு சப்ளை செய்ததாக ஒருவர், 2013-ல் கோவை பீளமேட்டில் சாதாரணத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி ஷ்யாம் சரண் டுடூ, திருப்பூரில் சாதாரண தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மேகாலயா நக்சல்கள் தீவிரவாதிகள் இருவர், கடந்த ஆண்டில் கேரளாவின் ‘மோஸ்ட் வான்டடு’ மாவோயிஸ்ட் தம்பதிகள் என திருப்பூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பட்டியல் நீள்கிறது.

கண்காணிப்பு இல்லாத நகரமா?


இதுதொடர்பாக திருப்பூர் தொ.மு.ச பனியன் சங்கப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், “திருப்பூரில் இது மாதிரியான நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல. தொழில் நகரமான திருப்பூருக்கு வேலை தேடியும், தொழில் தேவைக்காகவும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால், அவர்கள் பற்றிய எந்த விவரங்களையும் அறிய முடியாத நிலை இருக்கிறது. திருப்பூர் நகரம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. மக்கள் அடர்ந்தி மிகுந்துள்ளதால்,  யார்  வேண்டு மானாலும் திருப்பூரில் தங்கி இருக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் பதுங்கல் இடமாகவும் திருப்பூர் மாறியுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு எனச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாம் துளியும் இங்கு மதிக்கப்படுவதில்லை. எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்தால்தான், வேலை, வாடகை வீடு கிடைக்கும் என்ற சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பது தெரிந்தாலே இங்கே பதுங்க, யாரும் வரமாட்டார்கள். கண்காணிப்பு இல்லை என்பதுதான் சிக்கல். மீண்டும் இதில் அலட்சியம் காட்டினால் பயங்கரவாதிகளின் பதுங்கல் இடமாக திருப்பூர் தொடரும்” என்றார்.

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறதா திருப்பூர்?

பரிதாபத்தில் திருப்பூர் போலீஸ்!

“திருப்பூர் மிக வேகமாக வளர்ந்த நகரம். குற்ற நிகழ்வுகள், தீவிரவாதிகள் பதுங்கல் எனப் பல சம்பவங்கள் நடந்தாலும் திருப்பூருக்கு அரசு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. மாநகரமாக, மாவட்டமாக அறிவிக்கப்பட்ட போதும் திருப்பூர் காவல் துறையில் எந்தப் புதிய வசதிகளும் செய்து தரப்படவில்லை. போதிய போலீஸார் நியமிக்கப்படாமல், மாநகருக்கு, மாவட்டத்துக்கு எனப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட வேண்டிய பிரிவுகள் தொடங்கப் படவில்லை. பயங்கரவாதிகளைக் கண்காணிக்க வேண்டிய க்யூ பிரிவு திருப்பூரில் தொடங்கப்படவில்லை. மாநகருக்கென மாநில உளவுப்பிரிவான எஸ்.பி.சி.ஐ.டி பிரிவும் இல்லை. மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட எந்த வசதிகளும் திருப்பூரில் இல்லை. போதிய கண்காணிப்பு இல்லை. அடர்த்தி மிக்க மக்களின் நடுவே சர்வசாதாரணமாய் பதுங்கலாம் என்பதுதான் திருப்பூரின் இன்றைய நிலை. அதை மாற்ற வேண்டியது அவசியம்” என்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

“கடந்த ஆறு ஆண்டுகளாக மோசா திருப்பூரில் தங்கி இருக்கிறார். ‘ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்’ எனும் அமைப்பில் இருந்த இவர், பின்னர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார். இவர் தவிர திருப்பூரில் இருந்து மேலும் சிலரும் ‘ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்’ அமைப்பில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்கக் கூடும். அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பார்கள் எனச் சந்தேகிக்கிறோம்” என மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன.

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்