Published:Updated:

“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”

“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”

வெளிச்சத்துக்கு வந்த ‘வசூல்’ ஆடியோ!

“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”

வெளிச்சத்துக்கு வந்த ‘வசூல்’ ஆடியோ!

Published:Updated:
“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”

ருவாய்த் துறையினரின் லஞ்ச உரையாடல் அடங்கிய செல்போன் உரையாடல் டேப் விவகாரம் காஞ்சிபுரம் வருவாய்த் துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம்வரை வருவாய்த் துறைவருவாய்த் துறையினரின் லஞ்ச உரையாடல் அடங்கிய செல்போன் உரையாடல் டேப் விவகாரம் காஞ்சிபுரம் வருவாய்த் துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம்வரை வருவாய்த் துறை அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

இதுவரை 15-க்கும் மேற்பட்ட செல்போன் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.

காட்டாங்கொளத்தூர் வருவாய்த் துறை ஆய்வாளர் ஆறுமுகம் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் நடக்கும் உரையாடலில் பண பேரம் பேசப்படுகிறது.

“கிளார்க்குல இருந்து கலெக்டர் வரை பணம் கொடுக்கணும்... ரெண்டு கோடி ரெடி பண்ணிடுங்க!”

ஆடியோ சர்ச்சையில் சிக்கியிருக்கும் ரமேஷ் என்பவரிடம் பேசினோம். ‘‘ஆடியோவில் பேசியிருப்பது நான்தான். மறைமலைநகரில் கடம்பூர் பகுதியில் 368 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 1964-லிருந்து பயிரிட்டு வந்தார்கள். பிறகு, அந்த நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றி, விற்கப்பட்டன. 2013 ஜனவரி 7-ம் தேதி எவ்வித அறிவிப்பும் இன்றி காட்டாங்கொளத்தூர் வருவாய்த் துறை ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர் ஜே.சி.பி இயந்திரங்களோடு வந்து மொத்த வீடுகளையும் தரைமட்டமாக இடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் ஜே.சி.பி வண்டியை அங்கிருந்த மக்கள் கல்லால் அடிக்க ஆரம்பித்தார்கள். உடனே ஆர்.ஐ ஆறுமுகம் வேகமாக அங்கிருந்து கிளம்பினார். மாவட்ட ஆட்சியரிடம் ‘என்னைத் தாக்க வந்தார்கள்’ என்று சொல்லி ஸ்பெஷல் ஃபோர்ஸ் வாங்கி வந்தார். முக்கியப் புள்ளிகள் மீது வழக்கும் போட்டார்கள். சுமார் 1,500 பேருக்கு மேல் திரண்டு மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனிடம் முறையிட்டோம். ‘நீங்க ஏக்கர் கணக்கில் நிலங்களை வெச்சிருக்கீங்க. அதற்கு அனுமதி கிடையாது. ஆளுக்கு ரெண்டு சென்ட் வேணும்னா கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்’னு மாவட்ட ஆட்சியர் சொன்னார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர்களும் மாறிக்கொண்டே இருந்தார்கள். நாங்களும் தொடர்ந்து மனுக் கொடுத்துவந்தோம். அப்போது இணை தாசில்தார் பதவிக்கான ட்ரெனிங்குக்காக காஞ்சிபுரம் வந்திருந்தார் ஆறுமுகம். அவரோட அசிஸ்ட்டென்ட் ஜீவரத்தினம் என்பவர், பணம் செலவு செய்தால்தான் நிலம் கிடைக்கும் என்று சொன்னார். ஆயிரம் பேராக இருந்தவர்கள், மூன்று வருட போராட்டத்துக்குப் பிறகு 400 பேராக குறைந்துவிட்டார்கள். கடைசியாக 400 பேரும் அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்கலாம் என்று முடிவெடுத்தோம். ஒரு நபருக்கு 35 ஆயிரம் வீதம் மொத்தம் 400 பேருக்கு ஒரு கோடியே 40 லட்சம் கொடுப்பதற்கு சம்மதித்தோம். ரெண்டாயிரம், மூவாயிரம் என ஒவ்வொருவரிடமும் வசூல் செய்து 12.45 லட்சம் ரூபாய் ஆறுமுகத்திடம் கொடுத்திருக்கிறோம். அலுவலக உதவியாளர் ஜீவரத்தினத்துக்கு 5 லட்சம் பேசப்பட்டு, 1.35 லட்சம் கொடுத்தோம். அவர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். நாங்களும் எப்போது பணம் கேட்டாலும் கொடுத்து வந்தோம்.

சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் செங்கல்பட்டிலிருந்து செய்யூர் தாலுகாவுக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார். அதற்கு பின்பு போன் செய்தாலே எடுப்பதில்லை. வீட்டுக்குப் போனால் அதிகாலையிலேயே வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுவார். இவர் செய்யூருக்கு பணிமாறுதலானதும் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் அவர் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். எங்களைப்போல பலரும் ஏமாந்திருக்கிறார்கள் என்று அப்போதுதான் தெரிந்தது. எங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்திருந்தால்கூட பரவாயில்லை. அதனால்தான் அவரிடம் பேசிய ஆடியோவை மாவட்ட ஆட்சியர், ஆர்.டிஓ., டி.ஆர்.ஓ, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள் என எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டேன். இப்போது விசாரணைக்காக என்னை அதிகாரிகள் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். என் வீட்டுக்கு என்னைத்தேடி யார் யாரோ வந்து செல்கின்றனர். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது” என்றார்.

செய்யூர் டெப்டி தாசில்தார் ஆறுமுகத்திடம் அந்த ஆடியோக்களைப் போட்டுக் காட்டினோம். அதைக் கேட்டு அதிர்ந்தவர், நிலைகுலைந்து போனார். “அந்த ஆக்கிரமிப்பை நான்தான்அகற்றினேன். ரமேஷுக்கும் அங்கே ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அவரும் அதில் பாதிக்கப் பட்டார். ரொம்ப நல்ல மனுஷன். என்னிடம் நன்றாகத்தான் பழகிக் கொண்டிருந்தார். என்னோட மனைவி, பசங்க எல்லோரும் அவரை நம்பிப் பழகினோம். அவர் என்கூடத்தான் இருப்பார். நன்றாகப் பழகுவதால் என் செல்போனில் பேலன்ஸ் இல்லாததால் அவர் செல்போனிலும் பேசியிருக்கிறேன். ஏதோ மனசுல வெச்சிகிட்டு இப்படிப் பண்ணிட்டார். இப்படிச் செய்வார்ன்னு எனக்குத் தெரியாது” என்று தழுதழுத்தார்.

ரமேஷ் வெளியிட்டுள்ள 15 ஆடியோக்களில், டெப்டி தாசில்தார் இரண்டு கோடிக்கு பேரம் பேசும் ஆடியோவும், தனக்கு மட்டும் ஒரு கோடி வேண்டும் எனக் கேட்கும் பதிவும் இடம்பெற்றிருக்கிறது. ஆறுமுகம் பேசும் உரையாடலில், தலைமைச் செயலக அதிகாரிகள், கலெக்டரின் தனி கிளார்க், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆர்.ஐ., வட்டாட்சியர் அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை டி.எஸ்.பி என அனைத்துத் தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என ஆறுமுகம் கேட்பதாக உரையாடலில் உள்ளது.

லோக் ஆயுக்தா கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்துள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

- பா.ஜெயவேல்