Published:Updated:

முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்
முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்

முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முந்திரித் தோப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ள சாமி சிலை, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பதுகுறித்தும் சிலையை விற்பதற்காகக் கையை உடைத்து மண்ணில் புதைத்து வைத்தார்களா என்றும் அரியலூர் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் சிலை கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி., பொன்.மாணிக்கவேல், கோயில்களிலிருந்து திருடுபோன பல சிலைகள், வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தவற்றை மீட்டுவருகிறார். ஆனாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் சிலை திருட்டுச் சம்பவமும் அரங்கேறிக்கொண்டுதானிருக்கிறது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையத்தில், புதிய பேருந்து நிலையம் அருகில், ராஜேந்திரன் என்பவருடைய முந்திரித் தோப்பில் பழம் பொறுக்கப் போனவர்கள், சருகுகளுக்கிடையே ஏதோ தட்டுப்பட்டதைப் பார்த்தனர்.

அது சாமி சிலையாக இருந்ததால், உடனடியாக உடையார்பாளையம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.  விரைந்து வந்த போலீஸார் அந்தச் சிலையை மீட்டனர். சிலை, 2.5 அடி உயரமும் 40 கிலோ எடையும் கொண்டிருக்கிறது. சாமி சிலையின் இடதுபுற இரண்டு கைகளின் மணிகட்டு வரை வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. மேலும், வலதுபுற கைவிரல்களில் இரண்டு விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்தச் சிலையின் அடிபீடத்தில், மாணிக்கத்தம்மாள்  புள்ளம்பாடி எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை, எந்த ஊரில் உள்ள கோயில் சிலை? இது கொள்ளையடிக்கப்பட்டதா அல்லது கடத்திச் செல்லும்போது விட்டுச் செல்லப்பட்டதா எனவும் உடையார்பாளையம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சிலையை, ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மர்ம மனிதர்களால் கோயிலிலிருந்து சிலை கடத்திவரப்பட்டுள்ளது. உலோகத்தால் ஆன சிலையா என்பதுகுறித்து பரிசோதனை செய்வதற்காகக்கூட அதன் பாகங்களை வெட்டி எடுத்துச் சென்றிருக்கலாம். அந்தச் சிலை, வெண்கலம் என்பதால் அப்படியே முந்திரிக் காட்டில் வீசியிருக்கலாம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு