Published:Updated:

நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

புகார்

நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

புகார்

Published:Updated:
நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?
நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, கட்சியில் இருந்த காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் வெளியே வர ஆரம்பித்து உள்ளன.

சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சியில் காவல் துறை துணை கமிஷனர் மயில்வாகனனிடம் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் புகார் செய்துள்ளனர். சசிகலா புஷ்பா மீது நெல்லையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தனக்கு, கான்ட்ராக்ட் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி, ரூ.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாநகரக் காவல் துறை கமிஷனர் திருஞானத்திடம் புகார் செய்துள்ளார்.

இதுபற்றி ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘நான் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மாற்றுத்தொழில் தொடங்க முடிவு செய்தேன். அந்தச் சமயத்தில், சசிகலா புஷ்பாவைச் சந்தித்து உதவி கேட்டால் செய்து கொடுப்பார் எனச் சிலர் சொன்னதால், அவரைச் சந்திக்கச் சென்றேன். சசிகலா புஷ்பாவைச் சந்தித்தேன்.

அவர் என்னிடம் பேசியபோது, ‘நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள செடிகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட் பெற்றுத் தருகிறேன்’ என உறுதி அளித்தார். அவர் கேட்டுக் கொண்டபடி மறு வாரம் சென்று சந்தித்தபோது, ‘இந்த வேலைக்கு மற்றவர்களானால் ரூ.25 லட்சம் தர வேண்டும். நீங்க நம்ம சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கீங்க. அதனால், ரூ.20 லட்சம் கொடுங்கள்’ என்றார்.

அதை நம்பி, என் நண்பரான பாக்கிய சிங் உடன் சென்று அவரிடம் முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்தேன். சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும் உடன் இருந்தார். பணத்தை வாங்கிக்கொண்ட சசிகலா புஷ்பா, ஒப்பந்த ஆர்டர் கிடைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மீதித் தொகையை கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார். பின்னர், ஒப்பந்தம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘இனிமேல் இதுபற்றி என்னிடமோ, என் கணவரிடமோ போனில் பேச வேண்டாம். நேரில் வந்து பேசுங்கள்’ என்றார்.

அதனால், அவருடைய வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி வந்தேன். ‘நிச்சயமாக உங்களுக்கு இந்த கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுத்துவிடுவேன். என்னை நம்புங்கள்’ என்று சொல்லி வந்தார். நானும் அவரை நம்பினேன். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒருநாள், எனக்கு கான்ட்ராக்ட் ரெடியாகி விட்டதாகவும் உடனடியாக மீதி உள்ள ரூ.12 லட்சத்தை தருமாறும் சசிகலா புஷ்பாவின் கணவர் என்னிடம் போனில் தெரிவித்தார்.

நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

நான் எங்கே பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதற்கு, ‘சசிகலா புஷ்பா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கட்சியின் சார்பாக நடைபெறும் மருத்துவ முகாமில் பங்கேற்றுள்ளார். அங்கேயே சென்று கொடுத்து விடுங்கள்’ என்றார். நானும் அங்கே சென்று அவரிடம் பணத்தைக் கொடுத்தேன். ஆனால், அவர் சொன்னதுபோல ஒரு வாரத்தில் எனக்கு கான்ட்ராக்ட் ஆர்டர் வரவில்லை. பலமுறை இதுபற்றிக் கேட்டும் முறையான பதில் வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த நான், எனது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கேட்டேன். இதனால் கோபம் அடைந்த சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும், ‘இனிமேல் நீ பணத்தைக் கேட்டு இங்கே வரக் கூடாது. தொடர்ந்து இதேபோல வந்து கொண்டிருந்தால், உன்னைக் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டினார்கள். அதனால் அவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு புகார் கொடுத்திருக்கிறேன்” என்றார் ஆற்றாமையுடன்.

அவருடன் வந்திருந்த வழக்கறிஞர் ஜெனி, ‘‘இந்தப் பிரச்னையில் ராஜேஷ் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகள் இதுபற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அவரது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

நெல்லை மாநகர காவல் துறை கமிஷனர்  திருஞானத்திடம் கேட்டதற்கு, ‘‘சசிகலா புஷ்பா மீது ராஜேஷ் என்பவர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன். விசாரணைக்குப் பின்னரே இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியும்” என்று முடித்துக்கொண்டார்.

சசிகலா புஷ்பா மீது தொடர்ச்சியாகத் தொடுக்கப்படும் புகார்களைக் கண்டு அவர் அஞ்சி ஒதுங்குவாரா? தைரியமாக எதிர்கொள்வாரா என்பது போகப்போகத் தெரியும்.

- பி.ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்