Published:Updated:

"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"
பிரீமியம் ஸ்டோரி
"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

பகீர் வாக்குமூலம் தரும் பானுமதி!

"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

பகீர் வாக்குமூலம் தரும் பானுமதி!

Published:Updated:
"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"
பிரீமியம் ஸ்டோரி
"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"
"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

டியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டார் சசிகலா புஷ்பா. ‘‘எனது கட்சித் தலைவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார்” என்ற பகீர் புகாரை நாடாளுமன்றத்தில் தெரிவித்த சசிகலா புஷ்பா மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கிளம்புகின்றன.

கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு பானுமதி என்ற 22 வயது பெண், தன் அக்கா ஜான்சி ராணியுடன் வந்தார். எஸ்.பி-யிடம் கொடுத்த மனுவில், பல அதிர்ச்சிகரமான புகார்களை அவர் சொல்லியிருக்கிறார்.

‘‘நான், 2011-ல் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு, வீட்டு வேலைக்குப் போனேன். அவர் எப்போதும் கறாராக இருப்பார். சில சமயம் மது போதையில்தான் வீட்டுக்கு வருவார். வந்தவுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகக் கட்டிலில் படுப்பார். என்னை மசாஜ் செய்துவிடச் சொல்வார். சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் அசிங்கமாகப் பேசி காலால் எட்டி உதைப்பார். சில சமயங்களில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ‘ஏய் குட்டிச் சாத்தானே... எந்திரிடி! காலை அமுக்கிவிடுடி’ என்று கொடுமைப்படுத்துவார். அவரது கணவரும் ஒருநாள், ‘அக்காவுக்கு மட்டும்தான் நீ மசாஜ் பண்ணிவிடுவாயா? எனக்கும் பண்ணிவிடு’ என்று சொல்லிக் கட்டிலில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டார். ‘முடியாது’ என்று நான் அழுதேன். ‘மசாஜ் பண்ணவில்லை என்றால், கொன்னுடுவேன்’ என்று என் கன்னத்தில் அடித்தார். வேறு வழியின்றி மசாஜ் செய்தேன். பிறகு, அவருடைய ஆண் உறுப்பில் எண்ணெய் தடவி, ‘மசாஜ் செய்’ என்று கொடுமைப் படுத்தினார். இப்படிப் பலமுறை அவருக்குச் செய்திருக்கிறேன்.

சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப், நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மேல் வந்து விழுவான். என் மீது கைவைத்து செக்ஸ் டார்ச்சர் செய்வான். இதை சசிகலா புஷ்பாவிடம் சொன்னேன். அவரோ, ‘அவனுக்கு அப்படிப்பட்ட வயசு. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ. நானும் 18 வயசுல அப்படித்தான் இருந்தேன்’ என்று சொல்வார்.

"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

சசிகலா புஷ்பாவின் அம்மா கெளரி ஒரு முறை வந்திருந்தார். அப்போது, அந்த வீட்டில் இருந்து நான் தப்பி ஓட முயற்சி செய்தேன். அவங்க அம்மா உட்பட பலரும் சேர்ந்து என்னை அடித்து மிதித்தார்கள். என் தலைமுடியை கத்தரிக்கோலால் வெட்டினார்கள். மறுநாள் ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டி அனுப்பினார்கள். பிறகு, 2013-ம் ஆண்டு என் அக்காவை அங்கு வேலைக்குச் சேர்த்தார்கள். அவளையும் அதேபோல செக்ஸ் டார்ச்சர் செய்து இருக்கிறார்கள். சசிகலா புஷ்பா, எம்.பி என்பதால் உயிருக்குப் பயந்து அந்தக் கொடுமைகளை வெளியே சொல்லவில்லை” என்று புகார் மனுவில் சொல்லியிருக்கிறார்.

பானுமதியிடம் பேசினோம். ‘‘குடும்ப கஷ்டத்தால வீட்டு வேலைக்குச் சேர்ந்தோம். சசிகலா புஷ்பாவும், கட்சி ஆபீஸ்ல இருக்கும் பிலால் சாரும் ஒன்றாகத்தான் இருப்பாங்க. அமைச்சர் பழனியப்பன், நடுராத்திரியில வருவார். அவங்க எல்லாம் பெட்ரூம் உள்ளே குடிப்பாங்க. அந்த நேரத்துல நாங்க வெளியில நிற்போம். பெரிய பெரிய அதிகாரிங்க, அரசியல்வாதிங்க எல்லாம் வருவாங்க. யார்னு எங்களுக்குத் தெரியாது. எல்லோரும் ஒண்ணா கும்மாளம் போடுவாங்க.  அவங்களைப் பகைச்சிட்டு வெளியே போன ஏழு பேர் உயிரோடு இல்லை. தற்கொலை, விபத்து எனச் சொல்லிட்டாங்க. என் கணவர் கருப்பசாமியைக்கூட விபத்துல இறந்தார்னு சொன்னாங்க. ஆனா, விபத்தை ஏற்படுத்தி கொன்னுருப்பாங்களோ எனச் சந்தேகம் வருது. இவங்களைச் சும்மாவிடக் கூடாது. எங்களை வேலைக்குச் சேர்த்துவிட்ட முன்னாள் அமைச்சர் சண்முகநாதனையும், அவங்களோட மகள் காவ்யாவையும் விசாரிச்சா, எல்லா விவகாரமும் தெரிஞ்சிரும்” என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டோம். முடியவில்லை. பெயர் வெளியிட விரும்பாத அவர்களின் உறவினர் சிலர், “இந்த மாதிரி எல்லாம் வரும்ன்னு முதலிலேயே தெரியும். அதனாலதான் கோர்ட்ல முன்ஜாமீன்கூட வாங்கியிருக்காங்க. இது முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நடவடிக்கை” என்றவர்கள் அதற்குமேல் பேச மறுத்துவிட்டனர்.

- எஸ்.சரவணப்பெருமாள், படம்: ஏ.சிதம்பரம்