Published:Updated:

"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"

"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"
பிரீமியம் ஸ்டோரி
News
"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"

ஏர்வாடி ஆசியாவின் பகீர் வாக்குமூலம்!அராஜகம்

"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"

ன்னும் சில நாட்களில் உள்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடக்கப் போகிறது. அப்போது தமிழ்நாடு போலீஸாரின் திறமையை வியந்து முதல்வர் பேசக்கூடும். அதற்கு முன் ஏர்வாடியில் என்ன நடந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள பெரிய மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஷேக் அலாவுதீன், போலீஸ் லாக்-அப்பில் உயிரிழந்திருக்கிறார். அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது தாய் குற்றம்சாட்டி உள்ளார்.

"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"

அலாவுதீன் மீது கொலை, கொள்ளை என 23 வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளிவந்த அலாவுதீன், கடந்த சனிக்கிழமை தனது நண்பர்கள் செய்யது சாகுல் ஹமீது, பூமாரி ஆகியோருடன் சேர்ந்து சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த குமாரிடம் பணம் மற்றும் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி போலீஸார் கைதுசெய்து இருக்கின்றனர். அதன்பிறகு நடந்தது என்ன என்பது குறித்து அலாவுதீனின் தாய் முகம்மது ஆசியாவிடம் கேட்டோம். ‘‘ஏர்வாடி போலீஸ்காரங்க என் மகனைத் தேடி வீட்டுக்கு வந்தாங்க. ‘அவன் இல்லை’ன்னு சொன்னேன். உடனே அவங்க, ‘உன் மகன் எங்ககிட்ட சிக்குனான்னா பொணமாத்தான் வருவான்’னு சொல்லிட்டுப் போனாங்க. ‘அம்மா... அலாவுதீன் போலீஸ் ஸ்டேஷன்ல இறந்துபோயிட்டானாம். டி.வி-ல காட்டுறாங்க’னு என் பொண்ணு போன் பண்ணிச் சொன்னா. அப்பதான் என் மகன் இறந்த விஷயம் எனக்குத் தெரியும். என் மகன் திருடன்தான். அதுக்காக அவன அடிச்சா கொல்லணும்? அவன் திருடன் ஆனதுக்குக் காரணமே போலீஸ்காரங்கதான். அவனைத் திருடச் சொன்னதும் அவங்கதான். அப்படி அவன் திருடிட்டு வர்றதுல பங்கு வாங்கிக்கிட்டு இப்ப அவனைக் கொன்னும் போட்டுட்டாங்க. அவனைக் கொன்ன போலீஸ்காரங்கள பதவியை விட்டு நீக்கணும்’’ என்றார் கண்ணீருடன்.

"என் மகன் திருடன்... அவனை திருட சொன்னது போலீஸ்!"

பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முகம்மது ரசீன், ‘‘ஷேக் அலாவுதீனை விசாரணைக்காக ஏர்வாடி போலீஸார் அழைத்துச் சென்று, அங்கு ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதற்கான காயங்கள் அவரது உடலில் உள்ளன. அலாவுதீன் உடல்நிலை மோசமானது குறித்தோ, அவர் இறந்துபோனது குறித்தோ அவரது குடும்பத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனவே இது திட்டமிட்ட காவல் நிலையக் கொலைதான் எனச் சந்தேகம் எழுகிறது’’ என்றார்.

மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ‘‘அலாவுதீனின் மரணத்துக்குப் பிறகு, விசாரணை அதிகாரியாக இருந்த ஏர்வாடி இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு, மதுவிலக்கு

டி.எஸ்.பி அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை மேற்கொண்டு உள்ள நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். உள்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு விளக்கம் அளிப்பாரா?

- இரா.மோகன் படங்கள்: உ.பாண்டி

ராமநாதபுர மாவட்ட  லாக்-அப் மரணங்கள்!

1.
2002-ம் ஆண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பி என்ற பெண் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

2.
3.10.2012-ல் பரமக்குடி எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நகைத் தொழிலாளி வெங்கடேசன் மர்மமான முறையில் இறந்தார்.

3.
14.10.2014-ல் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் செய்யது முகம்மது என்ற வாலிபர் எஸ்.ஐ காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.