Published:Updated:

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Vikatan Correspondent
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்!
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்!
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்!

திண்டுக்கல்:  பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த 7 பேர் திண்டுக்கல் நத்தம் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தனர்.

மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ்,  கடந்த வியாழக்கிழமை மாலை மதுரையில் உள்ள அவரது வீட்டின் அருகே, காரில் சென்று கொண்டிருக்கும்போது வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக், சபாரத்தினம், சந்தானம் மற்றும் ராஜூ ஆகிய 7 பேர் இன்று காலை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முன் விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சரணடைந்த 7 பேரையும் 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, வருகிற செவ்வாய்க்கிழமையன்று அவர்களை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜர்படுத்துமாறு கூறினார்.

அன்றைய தினம் சரணடைந்த 7 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கோரப்படும் எனத் தெரிகிறது.