Published:Updated:

2 பிள்ளைகளையும் கொன்று தனது உயிரை மாய்த்துக்கொண்ட கொடூரத் தந்தை! போலீஸ் கண்முன் நடந்த பயங்கரம்

செ.சல்மான் பாரிஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியை சேர்ந்த அந்தோணி கூலி வேலை செய்து வருகிறார்

2 பிள்ளைகளையும் கொன்று தனது உயிரை மாய்த்துக்கொண்ட கொடூரத் தந்தை! போலீஸ் கண்முன் நடந்த பயங்கரம்
2 பிள்ளைகளையும் கொன்று தனது உயிரை மாய்த்துக்கொண்ட கொடூரத் தந்தை! போலீஸ் கண்முன் நடந்த பயங்கரம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியை சேர்ந்த அந்தோணி கூலி வேலை செய்து வருகிறார்.  இவர் மனைவி முனீஸ்வரி பட்டாசு ஆலையில் பணிபுரிபவர். இவர்கள்  9 வயதில் மகள் முத்துலட்சுமி மற்றும் 4 வயதில் மகன் முனீஸ்வரனுடன் வசித்து வந்தனர்.

கணவன் மனைவி இருவருக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது. இந்த நிலையில்  இன்று அதிகாலையில் அந்தோணி தனது மனைவி, மகன், மகள் மூவரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள், படுகாயத்துடன்  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரியை சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக  வெம்பக்கோட்டை போலீஸ் விசாரணை செய்து,  அருகிலுள்ள  சவுக்கு ஓடை கம்மாய்  அருகே  அந்தோனியை பிடிக்கச் சென்றபோது, பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிய அரிவாளால் காவலர்கள் முன்பே கழுத்தை அறுத்து தற்கொலை  செய்துகொண்டார் அந்தோணி. இன்று காலை நடந்த இச்சம்பவம் விருதுநகர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது. எதற்காகத் தனது மனைவி பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பதைக் காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.